Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுறுசுறு ‘SIR'..ஒட்டுமொத்தமாய் தூக்கப்படும் பெயர்கள்! கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஏராளமான பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 29ஆம் தேதி நிலவரப்படி 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களை இன்னும் பிஎல்ஓக்களிடம் சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் 24 லட்சம் இறந்த நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதும், சுமார் 22 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு முகவரி மாறி உள்ளதாக கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது ஏறக்குறைய 70 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது

தேர்தல் ஆணையம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை புதுப்பித்தாலும், இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் 'சிறப்பு தீவிர திருத்தம்' மிகவும் விரிவானதும் தீவிரமான பணியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக வீடு வீடாக சென்று நேரடியாக கணக்கெடுத்தல் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி நவம்பர் 4ஆம் தேதி தொடங்கியதுடன், துவக்கத்தில் டிசம்பர் 4ஆம் தேதி வரையதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் முழுமையான தரவுகளை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் இந்த காலக்கெடுவை டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Tamil Nadu Voter List election commission

தமிழக வாக்காளர் பட்டியல்

தற்போது, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பான BLO அதிகாரிகள் கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி, அந்த படிவங்களை பூர்த்தி செய்து திரும்பப் பெறுகின்றனர். வாக்காளர்கள் தங்கள் குடும்ப விவரங்கள், முகவரி, ஆதார் இணைப்பு உள்ளிட்ட தேவைப்படும் தகவல்களை வழங்கிய பின், BLO-கள் அந்தப் படிவங்களை சரிபார்த்து, அவர்களுக்கென வழங்கப்பட்ட சிறப்பு மொபைல் செயலியில் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். இந்த பதிவேற்றம் செய்யப்பட்டால்தான் டிசம்பரில் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் அந்த நபரின் பெயர் நிலைத்திருக்கும்.

சிறப்பு தீவிர திருத்தம்

இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஏராளமான பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இதுவரையிலான கணக்கெடுப்பில் 6.37 கோடி படிவங்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த மாத இறுதியில் கிடைத்த தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் 24 லட்சம் இறந்த நபர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெயர் நீக்கம்

அதேபோல், முகவரி மாற்றி நிரந்தரமாக வேறு இடங்களுக்கு சென்று விட்ட 27.10 லட்சம் பேர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளனர். மேலும், சுமார் 5.19 லட்சம் பேரை BLO அதிகாரிகள் வீடு வீடாக சென்று செக் செய்த போது, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிய முடியாத நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அனைத்து தரவுகளையும் சேர்த்து பார்த்தால், சுமார் 59 லட்சம் பேர் பெயர்கள் பல்வேறு காரணங்களால் பட்டியலில் இருந்து நீக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.

வரைவு பட்டியல்

இது இடைக்கால தகவல் மட்டுமே என்பதால், கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்த பின் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நவம்பர் 29ஆம் தேதியின் நிலவரப்படி, 50.91 லட்சம் வாக்காளர்கள் இன்னும் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களை BLO-களிடம் சமர்ப்பிக்காமல் உள்ளனர். இந்த எண்ணிக்கையும் வாக்காளர் பட்டியலை நேரடியாகப் பாதிக்கக்கூடியது. இறுதிப் பணி முடிவடையும் நேரத்தில், 69 லட்சத்திற்கும் மேலான பெயர்கள் நீக்கப்படக்கூடும் என்ற மதிப்பீடும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

இது போன்ற குழப்பங்களால், உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் கூட நீக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக சில இடங்களில் புகார்கள் எழுந்துள்ளன. இதை சரி செய்யும் நோக்கில், ஒரே நபரின் பெயர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதை கண்டறிந்து, வாக்காளர் விரும்பும் முகவரியை வைத்துக் கொண்டு மற்ற இடங்களில் உள்ள பெயர்களை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+