வங்கித் தேர்வுகளில் அதிக தேர்ச்சி... ஒவ்வொருவரின் அரசுத் தேர்வு கனவையும் நனவாக்குவோம் - பரத் சீமான்
சென்னை: வங்கி பணிகளுக்கான போட்டித் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பதாக வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் பரத் சீமான் கூறியுள்ளார். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வங்கிப்பணிகளுக்கான அறிவிப்பும்,அரசு பணிகளுக்கான அறிவிப்பும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. பல பயிற்சி நிறுவனங்களில் போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி பெற்று தேர்வு எழுதுகின்றனர்.

பல லட்சம் பேர் போட்டித்தேர்வுகளை எழுத ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்கின்றனர். கடின உழைப்போடு படித்து தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றிகள் நிச்சயம் என்பது பயிற்சி மையத்தினரின் கருத்தாகும்.
செய்தியாளர்களை சந்தித்த வெரான்டா ரேஸ் நிறுவனத்தின் தலைவர் பரத் சீமான் கூறுகையில், தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கூறினார். கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்திக்கு பிறகு நடைபெற்று முடிந்த வங்கிப்பணிக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஓராண்டு முழுமையாக சரியான பயிற்சி பள்ளியில் சேர்ந்து பாடப்பிரிவுகளை திட்டமிட்டு படித்தால் நிச்சயம் அரசு பணிகளில் வாய்ப்பு பெற முடியும் எனக் கூறினார். எதிர்வரும் நாட்களில் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் அறிவிப்புகள் வர இருப்பதாக கூறிய அவர், ரயில்வே துறையில் மட்டும் விரைவில் ஒரு கோடி காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.
வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவனத்தில் படித்த 521 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வெற்றி ஒவ்வொரு மாணவருக்கு ஒரு அரசு வேலை என்ற லட்சியத்தை பறைசாற்றும் விதமாக உள்ளது.
வெராண்டா ரேஸ் நிறுவனம், வங்கிப்பணி மட்டுமல்லாது டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி, ஸ்டாப் செலக்சன் கமிஷன் ஆகிய தேர்வுகளுக்கும் ஆன்லைனிலும் நேரடியாகவும் பயிற்சிகளை அளிக்கிறது. தொழில் நுட்பம், செய்முறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து உயர்தர பாடங்களை பத்து வருடங்களுக்கும் மேலாக வழங்கி வருகிறது. ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடான முறைகளுடன் பல்வேறு வகையான கற்றல் முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாணவரும்
கல்வியின் பயன்களைப் பெற வேண்டும் என்று கவனம் செலுத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. பல மாணவர்கள் அரசு தேர்வுக்காக வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவனத்தில் படித்து தங்களின் அரசு வேலைக் கனவை நனவாக்கியுள்ளனர். இதுபோன்ற இன்னும் பல ஆயிரக்கணக்கான அரசு வேலைக் கனவுகளை நனவாக்க வேண்டும் என்பதே தங்களின் குறிக்கோள் என்றும் பரத் சீமான் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திரும்ப திரும்ப சிக்கும் இண்டஸ்இண்ட் வங்கி.. மீண்டும் மெகா மோசடி.. மோடி, ஆர்பிஐ வரை பறந்த கடிதம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications