நாட்டிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம்.. தமிழ்நாடு 3வது ஆண்டாக முதலிடம்.. வெளியான பட்டியல்
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி, அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதத்தில் 68 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகம் கடன் வாங்கி முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2022-23 நிதி ஆண்டில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுது. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரப் பிரதேசம் ரூ.51,860 கோடி வாங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மகாராஷ்டிரா ரூ.50 ஆயிரம் கோடியுடன் 3வது இடத்தில் இருக்கிறது.

கடந்த 2020-21, 2021-22 ஆகிய முந்தைய 2 நிதி ஆண்டுகளிலும் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு கடந்த 2020-21 நிதி ஆண்டில் ரூ.87,977 கோடி கடன் வாங்கிய இருந்ததாகவும், 2021-22-ல் ரூ.87 ஆயிரம் கோடி கடன் வாங்கியதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த 2020-21, 2021-22 நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில் தமிழகம் வாங்கிய கடன் சற்றே குறைந்துள்ளதாகவும், அதேநேரத்தில், நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள கடன் அளவுக்குக் கீழ்தான் தமிழ்நாடு கடன் பெற்றுள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வு செய்த போது, கடந்த நிதி ஆண்டில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகியவை கடன் வாங்குவதை அதிக அளவில் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2022-23 நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் உத்தரப் பிரதேசம் ரூ.33,500 கோடி கடன் வாங்கி உள்ளதாகவும், ஆனால் அதற்கு முந்தைய நிதியாண்டான 2021-22 நிதி ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம் ரூ.62,500 கோடி கடன் வாங்கி இருந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கடந்த நிதியாண்டில் சொந்த வரி மற்றும் வரியற்ற வருவாய் ஆகியவற்றின் அதிகரித்ததால் கடன் வாங்குதை குறைத்துள்ளதாகவும் கூறப்பபடுகிறது.

அதேநேரம், ஹரியாணா, குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் 2021-22 நிதி ஆண்டில் வாங்கிய கடனைவிட 2022-23 நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் அதிக கடன் வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் (ஏப்ரல்-ஜூன்) மகாராஷ்டிரா ரூ.25 ஆயிரம் கோடியும், தமிழகம் ரூ.24 ஆயிரம் கோடியும், ஆந்திரப் பிரதேசம் ரூ.20 ஆயிரம் கோடியும் கடன் வாங்கும் என ரிசர்வ் வங்கி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உத்தரப் பிரதசேம் ரூ.18,500 கோடியும், ராஜஸ்தான் ரூ.15 ஆயிரம் கோடியும், பஞ்சாப் ரூ.12,700 கோடியும், மேற்கு வங்கமும் தெலங்கானாவும் ரூ.12,500 கோடியும், ஹரியாணா ரூ.12 ஆயிரம் கோடியும், குஜராத் ரூ.11 ஆயிரம் கோடியும் கடன் வாங்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
-
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications