மாற்றுத்திறனாளி பயணிகளை அன்போடு நடத்துங்கள் - ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத் துறை ஆர்டர்
சென்னை : மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஓட்டுனர், நடத்துனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் நிறைய இடர்பாடுகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளின் பாடு பெரும்பாடுதான். அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் கூட அவர்களால் அமரமுடியாத நிலை உள்ளது.
பேருந்து நிற்கும் முன்பே எழுந்து தயாராக பயணிகளை நிற்கச் சொல்லி... அவசரமாக இறங்கச் சொல்லி பாடாய் படுத்திவிடுவார் நடத்துனர். நீங்க எல்லாம் ஏன் பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாமே என்று கூட சுடுசொல் வீசுவார் கண்டக்டர்.
மாற்றுத்திறனாளி பயணிகள் நின்றிருந்தாலும் கூட பெண் பயணிகள் இருந்தாலும் கூட இலவச பயணம் தானே என்று ஏளனப்பேச்சும் பேச ஆரம்பித்து விட்டனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு போக்குவரத்துறை சார்பில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி பயணிகள்
ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்; பேருந்தில் மாற்றுத்திறனாளிகளை உபசரிப்புடனும் அன்புடனும் நடத்த வேண்டும். மாற்றுத் திறனாளி பயணிகள் பேருந்திற்காக நிற்கும் போது முறையாக பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

இழிவாக பேச வேண்டாம்
பேருந்தில் இடம் இல்லை என மாற்றுத் திறனாளிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது. மாற்றுத்திறனாளிகளிடம் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் சிரமம் இல்லாமல் பயணிக்க நடத்துனர் உதவ வேண்டும்.

கட்டண சலுகை
மாற்றுத் திறனாளிகள் அவர்களது இருக்கையில் அமரவும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஏறவும் உதவ வேண்டும். சாதாரண கட்டண பேருந்தில் மாற்றுத் திறனாளியுடன் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கலாம். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பேருந்துகளில் 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதி
முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திட்டம் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. மேலும் பெண்கள் மத்தியில் இந்த திட்டம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய கூடிய வசதிகள்
தமிழக அரசு புதிதாக 4000 பேருந்துகளை வாங்க திட்டமிட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2016 ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அரசு புதிய பேருந்து வாங்க முடிவு செய்துள்ளது. இதில் 10 % பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய கூடிய வசதிகளை கொண்டிருக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும் மாற்று திறனாளிகள் மற்றும் அவரின் உதவியாளர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications