2 சம்பவங்கள் நடக்க போகுது! தமிழ்நாட்டை நெருங்கி வரும் "ஹை - ஸ்பீட்" சக்கரம்? முக்கிய வானிலை வார்னிங்
சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இரண்டு விதமாக மாற்றம் அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து உள்ளது.
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்தது. அதன்பின் கடந்த 3 நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவுகிறது.

மீண்டும்
இந்த நிலையில்தான் தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அந்தமான் அருகே இந்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி வரும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன.

மழை
இதனால் 20ம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் மழை பெய்யும். அதுவரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஆனால் கடந்த வாரங்களில் பெய்தது போல மழை பெய்யாது. 20ம் தேதிக்கு பின்பாக, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும். மொத்தம் 2 விதமான சம்பவங்கள் இதில் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

சம்பவம் 1
அதன்படி காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை - நெல்லூர் நோக்கி செல்லலாம். அதாவது பெரும்பாலும் ஆந்திர பிரதேசத்தை குறி வைத்து இது நகரலாம். அப்படி நகரும் பட்சத்தில் நெல்லூர் பகுதியில் இருக்கும் வறண்ட காற்று இந்த தாழ்வு பகுதியை குலைக்கும். அப்படி நடந்தால் தாழ்வு பகுதி வேகமாக வலிமை இழக்கும். இதனால் தமிழ்நாட்டிற்கு பெரிய மழை இருக்காது.

சம்பவம் 2
இரண்டாவது வாய்ப்பு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி வரலாம். அதாவது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அதன்பின் அது தமிழ்நாட்டை நோக்கி வரும் வாய்ப்புகள் உள்ளன. மத்திய தமிழ்நாட்டை நோக்கி வரும் பட்சத்தில் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும். முக்கியமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

டெல்டா
அதன்பின் மத்திய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். ஒருவேளை இரண்டாவது சம்பவம் நடக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் கனமழை மிக தீவிரமாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு சில மணி நேரங்களில் மிக அதிக அளவு மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. 1 மணி நேரத்தில் பல மிமீ அளவிற்கு மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

மழை வாய்ப்பு
இந்த காற்றழுத்த சக்கரம் தமிழ்நாட்டை நோக்கி வேகமாக வரவே தற்போது அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் போக போக நிலைமை மாறினால், ஆந்திரா நோக்கி செல்லும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு குறைவு. மாறாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது மாறும். அதன்பின் கரையை கடக்கும். இதன் மூலம் சென்னை 3வது புயலில் இருந்து இந்த வடகிழக்கு பருவமழை சீசனில் தப்பிக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications