தேர்தல் வியூகத்தில் தீவிரம் காட்டும் விஜய்! தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது!
சென்னை: எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் வியூகம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. விஜய் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக அரசியல் பேசும் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த விஜய், ஒருவழியாக கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். சமத்துவத்தையும், சகோதாரத்துவத்தையும் தனது கொள்கைகளாக அறிவித்த விஜய், நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும், சட்டமன்ற தேர்தலில்தான் போட்டி என்றும் அறிவித்தார். இதனையடுத்து அவரது கட்சியின் முதல் மாநாடு விழுப்புரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.

திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளை கொள்கை எதிரியாகவும் விஜய் அறிவித்திருந்தார். இதனையடுத்து அவரது அரசியல் நடவடிக்கைகள் சில கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. தொண்டர்களை நேரில் சந்தித்து அரசியல் பேசாமல் இருப்பது, முக்கியமான விஷயங்களில் போராட்ட களத்திற்கு வராமல், சோஷியல் மீடியாவில் கண்டன அறிக்கை விடுத்து கடந்து போவது என விஜய் தொடங்குவதற்கு முன்னரே விமர்சனங்கள பலவற்றை எதிர்கொண்டார்.
இப்படியே போனால் வேலைக்கு ஆகாது, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது என்பதை உணர்ந்த நிர்வாகிகள், கள அரசியலுக்கு வர விஜய்க்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினர். இந்த அழுத்தம், அவரை களத்திற்கு கொண்டு வந்தது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 900 நாட்களுக்கும் மேல் போராடி வரும் மக்களை அவர் சில நாட்களுக்கு முன்னர் நேரில் சென்று சந்தித்தார். ஆனால் அதிலும் கூட சில சலசலப்புகள் எழுந்தன. மண்டபத்தில் கிரம மக்கள் விஜய்க்காக காத்திருந்தனர். ஆனால் அவரோ, மண்டபத்தின் வாசலில் கூடியிருந்த தனது ரசிகர்கள் மத்தியில் பேசிவிட்டு சென்றுவிட்டார்.
இப்படி இருக்கையில்தான் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை விஜய் கூட்டுவதாக அறிவித்திருக்கிறார். 2026 தேர்தலுக்கு குறைந்த காலமே இருக்கும் நிலையில், மேலும் கள அரசியல் பணிகளை தீவிரப்படுத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வேங்கைவயலுக்கு விஜய் செல்ல உள்ளதாகவும், இது குறித்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
பல மாதங்கள் ஆகியும் குடிநீர் தொட்டியில் யார் மலம் கலந்தது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, இதில் விஜய் கவனம் செலுத்த இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. எனவே நாளை நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று, அடுத்த கட்ட அரசியல் திட்டம் குறித்து பேசுவார். அவர் என்ன பேசுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications