முதல் ஆளாக வந்து.. அதிகாலையிலேயே லைனில் நின்று வாக்களித்த ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி.. சூப்பர்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலூக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் அதிகாலையிலேயே வாக்கை பதிவு செய்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்கு பதிவு நடக்க உள்ளது.
இன்று அதிகாலையில் இருந்தே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.

ரஜினி
நடிகர் ரஜினி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் பொது இடங்களுக்கு செல்லவில்லை. தேர்தல் நேரம் என்பதால் மிகவும் அமைதியாகவே இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் முதல் ஆளாக வந்து ரஜினி வாக்களித்தார்.

சூர்யா
நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். அதிகாலை 7 மணிக்கு சரியாக இவர்கள் வாக்களிக்க வந்தனர். லைனில் நின்று 15 நிமிடம் காத்திருந்து வாக்களித்துவிட்டு சென்றனர். தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் இவர்கள் மூவரும் வாக்களித்தனர்.

பாதுகாப்பு
அதேபோல் சென்னையில் இருக்கும் மற்ற சில தொகுதிகளிலும் பிரபல நடிகர்கள் வாக்களித்தனர். அஜித், ரஜினி, சூர்யா உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் எல்லோரும் அதிகாலையிலேயே வாக்களித்தனர். கொரோனா காலத்தில் கூட்டத்தை தவிர்க்க இப்படி அதிகாலையில் இவர்கள் வாக்களிக்கிறார்கள்.

சூப்பர்
பெரிய நடிகர்கள் வாக்களிக்க வந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது . கூட்டம் கூடாத வகையில் நடிகர்கள் வாக்களித்துவிட்டு, அமைதியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர் .
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications