கீழடியில் உலகத்தரமான மியூசியம்.. கொற்கை, அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு.. பிடிஆர் அறிவிப்பு
சென்னை: கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படும், கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த 6 மாதங்களுக்கான தமிழ்நாடு பட்ஜெட் திட்டங்களை இன்று அவர் வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் ஆகும் இது.
இன்று பிடிஆர் தனது பட்ஜெட் உரையில், தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் முழுமையாக சீரமைக்கப்படும். முதியோர்களுக்கு எளிதாக ஓய்வூதியம் கிடைக்க வழி வகை செய்யப்படும். தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும்.

சாலைகள்
விபத்துகளின் எண்ணிக்கை குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் கொண்டு வரப்படும். விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ₹500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும். போக்குவரத்து ஆணையரகம் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.

செம்மொழி
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். முக்கியமான தமிழ் படைப்புகள் பிறமொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்படும். கல்வி புத்தகங்கள், வெளிநாட்டு அறிஞர்கள் புத்தகங்கள், போட்டி தேர்வு, மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்.

கீழடி
கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படும். உலக தரத்தில் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு இருக்கும். கீழடி உள்ளிட்ட அகழாய்வு பணிகளுக்கு ரூ5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தமாக தொல்லியல் துறைக்கு மொத்தமாக 23.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கொற்கை
கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தமிழ் வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் 80.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அதைவிட கூடுதலாக 6 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று பிடிஆர் தனது உரையில் குறிப்பிட்டார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications