சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலின் நவ.29-ல் அரியலூர் பயணம்- கங்கை கொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகளை பார்வையிடுகிறார்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 29-ந் தேதி அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து கங்கை கொண்ட சோழபுரம் அகழாய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

சென்னையில் இருந்து வருகிற 28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி செல்கிறார். அங்கிருந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகளையும் அவர் பார்வையிடுகிறார்.

காசி.. பெரியார்! பிரஸ்மீட்டில் கேட்ட ரிப்போர்ட்டர்! நாட்டுக்கு இது தான் தேவையா? கொந்தளித்த அன்புமணி! காசி.. பெரியார்! பிரஸ்மீட்டில் கேட்ட ரிப்போர்ட்டர்! நாட்டுக்கு இது தான் தேவையா? கொந்தளித்த அன்புமணி!

அரியலூரில் முதல்வர் ஸ்டாலின்

அரியலூரில் முதல்வர் ஸ்டாலின்

அரியலூரில் 29-ம் தேதி நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். திருச்சியில் காகித ஆலையினுடைய விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு விழாவும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கங்கை கொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகள்

கங்கை கொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகள்

தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கங்கை கொண்ட சோழபுரமும் ஒன்று. கங்கை கொண்ட சோழபுரத்தின் மாளிகை மேடு என்ற பகுதியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சோழப் பேரரசின் பெருமன்னராகிய ராஜராஜனுக்குப் பின்னர் ராஜேந்திர சோழன் சில ஆண்டுகள் தஞ்சையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான்.

ராஜேந்திர சோழன் அரண்மனை

ராஜேந்திர சோழன் அரண்மனை

இதன்பின்னர் கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருந்து 5 கி.மீ தொலைவில் சமவெளிப் பகுதியில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை ராஜேந்திர சோழன் உருவாக்கினான். தஞ்சை பெரிய கோவிலைப் போல கங்கை கொண்ட சோழபுரம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. சோழ கங்கம் என்ற மிகப் பெரிய ஏரி வெட்டப்பட்டு வடபுலத்து கங்கை நீர் ஊற்றப்பட்டது.

தரைமட்டமாக்கிய பாண்டியர்கள்

தரைமட்டமாக்கிய பாண்டியர்கள்

சோழப் பேரரசர்களின் அரண்மனைகள் பிற்காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் எனும் பாண்டிய மன்னனின் படையெடுப்பின் போது நிர்மூலமாக்கப்பட்டன. அப்படி அழிக்கப்பட்ட அரண்மனை இருந்த இடம்தான் இந்த மாளிகை மேடு. இப்பகுதியி அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட போது நீண்ட மதில் சுவர்கள், சோழர் கால நாணயங்கள், ஆணிகள் என பலவும் கிடைத்திருக்கின்றன. பொதுவாக சங்க கால தமிழர் தொடர்பான

அகழாய்வுகள் நடைபெறுகின்றன. இதில் பிற்கால சோழர்களின் அரண்மனை தொடர்பான அகழாய்வு, கங்கை கொன்ட சோழபுரத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilandu chief Minsiter MK Stalin to visit Ariyalur on November 29.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X