சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

கொரோனா குறித்த அரசாணைகளை.. அரசு இணையதளத்தில் வெளியிடணும்.. தமிழக அரசுக்கு, ஹைகோர்ட் உத்தரவு! கொரோனா குறித்த அரசாணைகளை.. அரசு இணையதளத்தில் வெளியிடணும்.. தமிழக அரசுக்கு, ஹைகோர்ட் உத்தரவு!

இது தொடர்பாகத் தமிழக சட்டசபையிலும் கடந்த 2018இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தீர்மானத்தை ஏற்றுப் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் கடிதம்

முதல்வர் கடிதம்

அமைச்சரவை தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் ஏற்று 7 பேரை விடுதலை செய்ய அதில் கோரப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் எம்.பி டி.ஆர் பாலு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அலுவலகத்தில் அளித்தார்.

ஏழு பேர் விடுதலை

ஏழு பேர் விடுதலை

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

அமைச்சரவை தீர்மானம்

அமைச்சரவை தீர்மானம்

அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர் அவர்களுக்குத்தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி 19.5.2021 அன்று குடியரசுத் தலைவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகத் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வலியுறுத்தல்

முதல்வர் வலியுறுத்தல்

அந்த கடிதத்தில் ஸ்டாலின், "மேற்கண்ட ஏழு பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து - ஏழு பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் " என்று வலியுறுத்தியுள்ளார்.

English summary
Tamilnadu CM Stalin latest letter regarding to the release of Rajiv Gandhi convicts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X