படையெடுக்கும் தமிழக காங்கிரஸ்.. நாளை ஆளுநர் மாளிகை நோக்கி கே.எஸ்.அழகிரி தலைமையில் பேரணி!
சென்னை: விலைவாசி உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நாளை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல உள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.
பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் நடவடிக்கைகள் முடங்கின.

சஸ்பெண்ட்
கடந்த 27 ஆம் தேதி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவிலிருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

விலைவாசி உயர்வு
இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி எம்.பிக்கள் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்டவை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தன. அதன் தொடர்ச்சியாக லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

நாடு தழுவிய போராட்டம்
நிர்மலா சீதாராமனின் விளக்கத்தை ஏற்க மறுத்து லோக்சபாவில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தன. இதற்கிடையே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை நேற்று நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைத்தது. டெல்லியில் உள்ள சோனியாவின் வீடு முன் போலீசார் குவிக்கப்பட்டன.
Recommended Video

ஆளுநர் மாளிகை
இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் கூட்டம் நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல், கேஸ் விலையேற்றம், வேலையின்மை, அக்னிபத் திட்டத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவது காங்கிரஸ் அறிவித்தது. தமிழ்நாட்டில் நாளை காலை 10 மணியளவில் ராஜிவ் காந்தி சிலையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அறிவித்து உள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications