சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி.. ஆளுநருக்கு கடினம்.. ஸ்டாலினுக்கு வாழ்த்து!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி தற்போது ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் மாளிகைக்கு ராஜினாமா கடிதத்தை முதல்வர் பழனிசாமி அனுப்பி உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

இதில் திமுக மட்டும் தனியாக 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 74 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. விராலிமலை தொகுதியில் மட்டுமே அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்து வருகிறார்.

 கடைசி நொடி வரை திக்திக்.. தில்லாக கடைசி நொடி வரை திக்திக்.. தில்லாக "சண்ட" செய்த கமல்.. உருகவைத்த அந்த போட்டோ.. நேற்று என்ன நடந்தது?

 நிலைமை

நிலைமை

பொதுவாக எதிர்க்கட்சி வெற்றிபெற போகிறது என்றால் தேர்தல் முடிவுகள் வெளியான மாலையிலேயே முதல்வர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவதே வழக்கம். ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டு, புதிய ஆட்சி அமையும் வரை காபந்து முதல்வராக மட்டுமே தற்காலிக முதல்வர்கள் செயல்படுவார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் வெற்றிபெறாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கவில்லை. தமிழகத்தில் பொதுவாக இப்படி நடந்தது இல்லை. தேர்தலின் நாளில் முடிவு வந்ததும் முதல்வர் ராஜினாமா செய்வதே தமிழக அரசியலில் பாரம்பரியமாக இருந்தது.

ஏன்

ஏன்

ஆனால் ஏனோ முதல்வர் பழனிசாமி நேற்று ராஜினாமா செய்யவில்லை. நேற்று முதல்வர் பழனிசாமி எதுவும் பேசாமல், மீடியாவை சந்திக்காமல் மௌனம் காத்தார். இதெல்லாம் போக இன்னொரு பக்கம் முதல்வர் பழனிசாமி அதிமுக தோல்வி குறித்தும், திமுக வெற்றி குறித்தும் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார். டிவிட்டரில் வெற்றி, தோல்வி குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.

செய்தியாளர்கள்

செய்தியாளர்கள்

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் மாளிகைக்கு ராஜினாமா கடிதத்தை முதல்வர் பழனிசாமி அனுப்பி உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் பழனிசாமி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ட்வீ ட்

ட்வீ ட்

முதல்வர் பழனிச்சாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு டிவிட்டரில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்று பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tamilnadu election result 2016: Edappadi Palanisamy did not resign from the CM post yet as AIADMK loses against DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X