கடனுக்கு வட்டியை தமிழக அரசே செலுத்தி.. தொழில் தொடங்க கடன் தருது.. எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: தமிழ்நாடு அரசு இளைஞர்கள் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறது. அதற்கு தகுதியான நபர்களுக்கு கடனுக்கான வட்டியை தமிழக அரசே செலுத்துகிறது. தொழில் தொடங்க உங்களுக்கு தேவையான கடனும் அளிக்கிறது. இந்த கடனை யாரெல்லாம் பெறலாம்? எப்படி பெறுவது? என்பதை இப்போது பார்ப்போம்.
விளிம்பு நிலையில் உள்ள எஸ்சி, எஸ்டி சாதி பட்டியலில் உள்ள மக்கள் முன்னேற வேண்டும் என்று விரும்பிய தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. ஆதிதிராவிட, பழங்குடியினத்தில் உள்ள மக்கள் தொழில் முனைவோராக மாறி முன்னேற வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் இது.

இந்த திட்டத்தின் கீழ் தொடங்கி முன்னேற விரும்பும் பட்டியல் சாதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 1.5 கோடி ரூபாய் வரை கடன் பெறாலாம். 55 வயதுக்குள் உள்ளவர்கள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்த கடனை எப்படி பெறுவது என்பதை இப்போது பார்க்கலாம்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில்முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும். அது உணவுப்பதப்படுத்தல், தென்னை நார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடைகள் தைத்தல், ரைஸ்மில், என்ஜினியரிங் தொழில்கள், சிலக் ரீலிங், ஸ்பின்னிங் மில், பவர்லூம், கட்டுமானப் பொருட்கள், மளிகைக்கடை, வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், வாடகை கார், ஆட்டோ, லாரி, வேன், பேருந்து, காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரெஃப்ரிஜரேட்டர் உள்ளிட்ட திட்டமாகவும் இருக்கலாம்.
இயங்கிக் கொண்டிருககும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில் நுட்ப மேம்பாடு முன்மொழிவுகளுக்கும் மானிய உதவி வழங்கப்படும்.
மானியம் மொத்த திட்டத்தொகையில் 35 சதவீதம் ஆகும். மானிய உச்ச வரம்பு ரூ.1.50 கோடி. இதுவன்றி கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் (10ஆண்டுகளுக்கு மிகாமல்) 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் 35 சதவீதம் மானியம் உண்டு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த எந்தத் தனிநபரும் மறறும் உரிமை கொண்ட தனியுரிமையாளர்ட பங்குதாரர் கூட்டாண்மை பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்க்ளுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. வயது 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். மொத்ததிட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். எனவே பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

தொழில முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்புப் பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் https://msmeonline.tn.gov.in/aabcs/aabcs_desc.php என்ற இணைய தளத்திற்குள் சென்று லிங்கை கிளிக் செய்தால் ரிஜிஸ்டரேசன் செய்ய சொல்லும். ரிஜிஸ்ட்ரேசன் செய்துவிட்டு அப்படியே விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்டத் தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்டத் தொழில் மையம் விளங்கும்.
குதியும் ஆர்வமும் கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் அவர்களுக்கு உரிமையான தொழில் அலகுகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் உள்ள மவட்ட தொழில் மையங்களை அணுகி மேலும் விவரங்களை பெறலாம். அனைத்து மாவட்டத்திலும் தொழில் மையம் இருக்கும். அங்கு உங்களுக்கு முழுமையாக வழிகாட்டுவார்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications