இந்தியாவுக்கு ஆதார்.. தமிழகத்திற்கு மக்கள் ஐடி.. 12 இலக்க எண்ணுடன் விரைவில் அறிமுகம்
சென்னை: இந்தியாவில் ஆதார் கார்டு எப்படியோ அது போல் தமிழகத்தில் வாழும் மக்களுக்கு "மக்கள் ஐடி" என்ற ஒரு கார்டை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பொது விநியோகம், முதல்வர் காப்பீட்டுத் திட்டம், வருவாய் கல்வி, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், கருவூலம் , சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் உள்ள தகவல்களை வைத்து ஒருங்கிணைந்த இந்தத் தரவு தளவு உருவாக்கப்படவுள்ளது.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் சார்ந்த அனைத்து தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறைகளால் சேமித்து பராமரிக்கப்படுகிறது.
பொது விநியோகத் துறை , வருவாய் துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட பொது மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பல்வேறு துறைகள் தனித்தனியாக தரவுகளை வைத்துள்ளன.

தமிழகத்தில்அனைத்து குடும்பங்களின் தகவல்கள்
இந்த நிலையில்தான் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தகவல்களை கொண்டு ஒன்றுபட்ட மாநில குடும்பத் தரவு தளத்தை தயார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்யவுள்ளது.

அனைத்து துறைகளின் தரவுகள்
அனைத்து துறைகளின் தரவுகளையும் ஒருங்கிணைத்து இந்தத் தரவு தளம் உருவாக்கப்படுகிறது. இதன்படி பொது விநியோகம், முதல்வர் காப்பீட்டுத் திட்டம், வருவாய் கல்வி, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், கருவூலம் , சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் உள்ள தகவல்களை வைத்து ஒருங்கிணைந்த இந்தத் தரவு தளவு உருவாக்கப்படவுள்ளது.

12 இலக்க எண்
ஆதார் எண்ணில் எப்படி 12 இலக்க எண் உள்ளதோ அது போல் மக்கள் ஐடி என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த தரவு தளத்திற்கும் 10 முதல் 12 இலக்க எண்ணை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு குடிமக்களுக்கும் தனித்தனி மக்கள் ஐடி வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து சேவைகளையும் இந்த ஒரு எண் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

டெண்டர்
இவற்றை தயார் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இது இறுதி செய்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது. வடமாநிலத்தவர்கள், புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தமிழக மக்களுக்கென தனித்துவமான கார்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆதார் கார்டு
வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு ஆகியவை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலம் மொபைல் போனுக்கு சிம் வாங்க சென்றாலும் முகவரி சான்றெல்லாம் கேட்காமல் ஆதார் கார்டு இருக்கிறதா என கேட்கிறார்கள். அதாவது முன்பு ரேஷன் கார்டு பயன்படுத்தப்பட்டது போல் தற்போது ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications