சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகம் காட்டும் தமிழகம்.. போதிய வேக்சின் ஒதுக்காமல் தாமதிக்கும் மத்திய அரசு.. அதிர்ச்சி தரும் பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தினமும் 2.50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டு வந்தாலும் கூட மத்திய அரசு போதிய வேக்சினை ஒதுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது. பெரும்பாலான தென் மாநில மாவட்டங்கள், பாஜக ஆளாத மாநிலங்களுக்கு மிகவும் குறைவாகவே வேக்சின் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    TN மருத்துவக்கட்டமைக்கு சவாலான 2nd அலை.. விரைவில் மீள்வோம்! MK Stalin நம்பிக்கை | Oneindia Tamil

    இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வேக்சின் போடுவதில் பல்வேறு மாநிலங்கள் வேகம் காட்டி வருகின்றன. முக்கியமாக தமிழக அரசு கடந்த 10 நாட்களாக தினமும் வேகமாக போட்டு வருகிறது.

    மாவட்டம் வாரியாக, சிறிய சிறிய கேம்ப்கள் நடத்தி, தெரு தெருவாக வேக்சினை கொண்டு சென்று மக்களுக்கு எளிதாக வேக்சின் போட்டு வருகிறார்கள்.

    கூட்டமோ கூட்டம்.. கொத்தாக கொரோனா பரப்பும் இடமாக மாறும் வேக்சின் மையங்கள்! அரசு நடவடிக்கை அவசியம் கூட்டமோ கூட்டம்.. கொத்தாக கொரோனா பரப்பும் இடமாக மாறும் வேக்சின் மையங்கள்! அரசு நடவடிக்கை அவசியம்

    வேக்சின்

    வேக்சின்

    அதிலும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மூலம் லோக்கல் கேம்ப்கள் நடத்தி தினமும் ஒரு ஏரியா, கிராமம், பொது இடம் என்று மொத்தமாக பிரித்து வேக்சின் போட்டு வருகிறார்கள். கிராமங்களுக்கே வேக்சின் கொண்டு சொல்லப்படுவதால் மக்கள் ஆர்வமாக வேக்சின் போடுகிறார்கள். மக்கள் வரிசையில் நின்று வேக்சின் போட்டு வருகிறார்கள்.

    ஆனால்

    ஆனால்

    இதனால் தமிழகத்தில் இருந்த வேக்சின் வேஸ்டேஜ் 6%ல் இருந்து அனுமதிக்கப்பட்ட 1% ஆக குறைந்துள்ளது. மன்னார்குடி போன்ற தொகுதிகளில் வேக்சின் வேஸ்டேஜ் 0%க்கும் கீழ் உள்ளது. இப்படி தமிழகம் வேக்சின் போடுவதில் வேகம் காட்டி வரும் நிலையில், மத்திய அரசு போதிய வேக்சின் ஒதுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.

    தாமதம்

    தாமதம்

    தமிழக அரசு கடந்த 10 நாட்களாக தினமும் 2 -3 லட்சம் பேருக்கு வேக்சின் போட்டு உள்ளது. மற்ற மாநிலங்களின் சராசரியை விட இது அதிகம் ஆகும். அதிலும் கடந்த சில தினங்களாக தினமும் 3 லட்சம் வேக்சின் வரை போடப்படுகிறது. மக்கள் மத்தியில் வேக்சின் போட்டுக்கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது கண்கூடாக தெரிகிறது.

    ஒதுக்கீடு

    ஒதுக்கீடு

    ஆனால் தமிழ்நாடு அரசு வேக்சின் போட தயாராக இருந்தும், மத்திய அரசு போதிய வேக்சின் அனுப்பாமல் தாமதம் செய்து வருகிறது. மே மாதத்திற்கு வர வேண்டிய டோஸ் கணக்கு 20.43 லட்சம், அதில் தமிழகத்திற்கு 18.67 லட்சம் டோஸ் வந்துள்ளது. 1.74 டோஸ் இன்னும் தமிழகத்திற்கு வர வேண்டும். மே மாதத்திற்கு வர வேண்டிய மீதமுள்ள டோஸ் இன்னும் வரவில்லை.

    மோசம்

    மோசம்

    இது இன்னும் வராத நிலையில் ஜூன் மாதத்திற்கான வேக்சின் எப்போது வரும் என்றும் தெரியவில்லை. ஜூன் மாதம் 40.58 லட்சம் டோஸ் தமிழகம் வர வேண்டும். முதல் சப்ளை ஜூன் 6ம் தேதி அல்லது 9ம் தேதிதான் வரும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை வேக்சின் காலியாகிவிடும். தமிழகத்தில் ஜூன் 3 முதல் 5 வரை தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    தமிழகத்திற்கு வேக்சின் ஒதுக்கீடு செய்வதில் தாமதம் செய்தது போல பஞ்சாப், கேரளா போன்ற பாஜக அல்லாத மாநிலங்களுக்கும் போதிய வேக்சின் வழங்கப்படவில்லை. அதிலும் மொத்த வேக்சின் ஒதுக்கீட்டில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு 1 கோடிக்கும் அதிகமான வேக்சின் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகம்

    தமிழகம்

    ஆனால் மே 1 வரை கணக்குப்படு தமிழ்நாட்டிற்கு 68 லட்சம் வரை மட்டுமே இதுவரை வேக்சின் வந்துள்ளது (மே இறுதிவரை 98 லட்சம்). மே 1 வரை கர்நாடகாவிற்கு 98 லட்சம் வேக்சின் சென்றுள்ளது. சட்டீஸ்கருக்கு 61 லட்சம் சென்றுள்ளது. பீகாருக்கு 79 லட்சம் சென்றுள்ளது. வேக்சின் வேகமாக போடப்படுவதை வைத்தே வேக்சின் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் தமிழகத்தில் தினமும் 2-3 லட்சம் வேக்சின் போடப்பட்டும் போதிய வேக்சினை இன்னும் மத்திய அரசு அனுப்பவில்லை.

    அடிப்படை

    அடிப்படை

    தமிழகத்தில் ஒரே நாளில் 50 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேக்சின் போடுவதற்கான கட்டமைப்பு உள்ளது. இப்போது இருக்கும் வேக்சின் மாடலை வைத்தே ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு வேக்சின் போட முடியும். ஆனால் போதிய வேக்சின் ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு தாமதிப்பதால், தமிழகத்தில் வேக்சின் போடுவதை நிறுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Govt vaccinates faster, Center has not released enough yet to the state. Tamilnadu government decides to stop vaccination due to shortage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X