சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக வென்றும் முடிவை அறிவிக்கவில்லை.. தமிழகம் முழுக்க பல இடங்களில் போராட்டம்.. பெரும் பரபரப்பு!

தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் திமுக வென்றும் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற முதல் திருநங்கை ரியா

    சென்னை: தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் திமுக வென்றும் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் கடந்த வாரம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 9 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மொத்தமாக முடிந்துள்ளது. மீதமுள்ள பகுதிகளில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    Tamilnadu Local body elections: DMK cadres protest for not announcing the victory of candidates

    இந்த நிலையில் இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக திமுகவினர் புகார் அளிக்க தொடங்கி உள்ளனர். அதாவது திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றாலும் முடிவுகளை அறிவிக்கவில்லை. தேவையில்லாமல் முடிவுகளை தாமதம் செய்கிறார்கள்.

    தேர்தலில் வென்றாலும் சான்றிதழ் அளிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்தில் இரண்டு வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றும், அதிகாரிகள் சான்றிதழ் வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது .அதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூரில் திமுக வேட்பாளர் பாலச்சந்திரனின் வெற்றியை அதிகாரிகள் அறிவிக்காமல் இருப்பதாக கூறி, தேர்தல் அதிகாரியோடு திமுகவினர் வாக்குவாதம்

    இதற்கு பெயர் தேர்தலா? வாக்கு எண்ணும் மையத்திலேயே அமர்ந்து தர்ணா.. செந்தில் பாலாஜி, ஜோதிமணி அதிரடி!இதற்கு பெயர் தேர்தலா? வாக்கு எண்ணும் மையத்திலேயே அமர்ந்து தர்ணா.. செந்தில் பாலாஜி, ஜோதிமணி அதிரடி!

    அதேபோல் திருமங்கலத்தில் திமுகவின் வெற்றியை அறிவிக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்து வருகிறார்கள். அங்கு உள்ளாட்சி தலைவர் பதவியில் வென்ற தவமணியின் வெற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கையின் போது, தவமணி அதிகமான வாக்குகள் பெற்றதால், வெற்றியை அறிவிக்க கூடாது என முனீஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, வெற்றி அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்ப்பட்டது .

    அதேபோல் கரூரில் வாக்கு எண்ணுவதிலும், முடிவுகளை அறிவிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி கரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங். எம்பி ஜோதிமணி தர்ணா போராட்டம் செய்து வருகிறார்கள்.

    2 முறை தேர்தல் ஆணையர் உடன் சந்திப்பு.. மிட் நைட் மீட்டிங்.. திமுகவினருக்கு ஸ்டாலின் தந்த எச்சரிக்கை!2 முறை தேர்தல் ஆணையர் உடன் சந்திப்பு.. மிட் நைட் மீட்டிங்.. திமுகவினருக்கு ஸ்டாலின் தந்த எச்சரிக்கை!

    பரமத்தியில் 16 வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காங். வேட்பாளருக்கு பதிலாக அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அங்கு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக இவர்கள் இருவரும் புகார் வைத்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu Local body elections: DMK cadres protest for not announcing the victory of candidates in many places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X