ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. போலீஸ் குவிப்பு!
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக போடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த வாக்குகள் மொத்தம் 315 மையங்களில் இன்று எண்ணப்படுகிறது.

மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை . இதில் ஊராட்சி தலைவர் தேர்தல் கட்சியை சார்பற்று தேர்தல் நடந்தது.அதேபோல் 5,090 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 9,624 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
இன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க பாதுகாப்பு பணியில் 45 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வடமாவட்டங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சில மாவட்டங்களில் மட்டும் தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் தேர்தல் பாதுகாப்பு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பாதுகாப்பு பணிகள் நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications