சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் தீவிரம் அடையும் கட்டுப்பாடு.. இனி மாஸ்க் போடலைனா ரூ. 500 பைன்.. அரசு சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலுக்கு இடையில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்து வருவதால் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு 1 வாரத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது.

உ.பி. தேர்தல்: தேதி அறிவிச்சு 48 மணி நேரம்தான் ஆச்சு.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 எம்எல்ஏக்கள்! உ.பி. தேர்தல்: தேதி அறிவிச்சு 48 மணி நேரம்தான் ஆச்சு.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 எம்எல்ஏக்கள்!

இரவு நேர லாக்டவுன், ஞாயிறு முழு லாக்டவுன் மட்டும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி பெரும்பாலான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டு உள்ளது.

மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

பண்டிகை காலம் என்பதால் மக்கள் வெளியே செல்வது அதிகரித்து இருக்கிறது. இதை முன்னிட்டே வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டு உள்ளது. ஆனால் பொங்கலுக்கு உடை எடுப்பது, நகை வாங்குவது என்று மக்கள் அதிக அளவில் வெளியே செல்கிறார்கள். இதனால் தமிழ்நாடு முழுக்க கொரோனா கேஸ்கள் உயர்ந்து வருகிறது. சென்னையிலும் தினசரி கொரோனா கேஸ்கள் 7 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் 7372 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு விரைவில் 20 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலுக்கு இடையில் தமிழ்நாட்டில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் 88,959 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓமிக்ரான் கேஸ்கள்

ஓமிக்ரான் கேஸ்கள்

தமிழ்நாட்டில் பதிவாகும் கேஸ்களில் பெரும்பாலான கேஸ்கள் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும். இந்த நிலையில் லாக்டவுன் விதிகள் தமிழ்நாட்டில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மாஸ்க் அணிகிறார்களா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தன்னார்வலர்கள் உதவியுடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை சோதனை செய்து வருகிறது. மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றும் நபர்களுக்கு இவர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள்.

அபராதம் உயர்ந்தது

அபராதம் உயர்ந்தது

இந்த நிலையில்தான் முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. மாஸ்க் அபராதம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். மாஸ்க்கை முழுமையாக அணிய வேண்டும். மாஸ்க் முழுமையாக அணியவில்லை என்றாலும் அபராதம் விதிக்கப்படும், என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Recommended Video

    ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் AIIMS கல்லூரிக்கான இடங்கள் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்படும் - மா.சுப்ரமணியன்
    விதி மீறல்

    விதி மீறல்

    கழுத்தில் மாஸ்க் போடுவது, வயிறுக்கு கீழ் மாஸ்க் போடுவது, மூக்கை மறைக்காமல் மாஸ்க் போடுவது போன்ற செயல்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இது சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாடு முழுக்க இன்று முதல் மாஸ்க் அணியாமல், அல்லது முறையாக மாஸ்க் அணியாமல் செல்லும் நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    English summary
    Tamilnadu Lockdown: Fine for not wearing mask increased to 500 rs in the state from 200 rs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X