Exclusive: இந்தி எதிர்ப்பு! உயிருள்ள வரை போராடணுமே தவிர.. உயிரை விடக் கூடாது! தலைவர்கள் வேண்டுகோள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியை எதிர்த்து உயிருள்ள வரை போராட வேண்டுமே தவிர யாரும் உயிரை விடக்கூடாது என அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தி திணிப்பு எதிர்ப்பை கண்டித்து சேலம் அருகே 85 வயது முதியவர் இன்று தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் ஒன் இந்திய தமிழிடம் பகிர்ந்து கொண்ட தகவல் வருமாறு;

வேல்முருகன்(தவாக)

வேல்முருகன்(தவாக)

''இந்தி திணிப்பை எதிர்த்து உயிரிழந்த முதியவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி எதிர்ப்புக்கு எதிரான வீரியம் இன்னும் தமிழகத்தில் குறையவில்லை என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இந்தியை திணிக்க முயற்சித்து அது முடியாதபட்சத்தில் இந்திக்காரர்களை தமிழகத்தில் திணிக்கப் பார்க்கிறார்கள். தமிழை வளர்க்கிறோம் என பிரதமர் மோடி கதை பேசிக்கொண்டே தமிழை அழிப்பதற்கான எல்லா வேலைகளிலும் ஈடுபடுகிறார். இனியாவது இந்தி திணிப்பு முயற்சியை ஒன்றிய அரசு முற்றிலும் கைவிட வேண்டும்.'' இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

அப்துல் சமது(மமக)

அப்துல் சமது(மமக)

''உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பரிந்துரைகளை ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும். இந்தியை எதிர்த்து உயிருள்ள வரை போராட வேண்டுமே தவிர யாரும் உயிரை விடக்கூடாது என்பது தாழ்மையான வேண்டுகோள். இந்தியை எதிர்த்து தனது இன்னுயிரை நீத்த பெரியவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழை பற்றி வெறும் வார்த்தைகளால் மட்டும் பிரதமர் மோடி புகழ்ந்து பேசினால் போதாது, அதனை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்)

செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்)

''இந்தியை விரும்பாவிட்டால் விட்டுவிட வேண்டும். அதைவிடுத்து இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. இந்தியை ஆதார மொழி என அமித்ஷா பேசுவதை எல்லாம் தமிழக மக்கள் ஏற்க தயாராக இல்லை. தமிழக மக்களை பொறுத்தவரை நன்றாக அரசியல் அறிவு பெற்றிருக்கிறார்கள், இலக்கிய இலக்கண புரிதல் உள்ளவர்கள் என்பதால் ஏமாறமாட்டார்கள்.''

தனியரசு(கொங்கு இளைஞர் பேரவை)

தனியரசு(கொங்கு இளைஞர் பேரவை)

''இந்தியை எதிர்த்து உயிர் நீத்த பெரியவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து கொள்கிறேன். எத்தனை காலம் ஆனாலும் இந்திக்கு எதிரான குணம் தமிழர்களிடம் இருந்து மறையாது என்பது இதன் மூலம் உணரப்பட்டுள்ளது. நீருபூத்த நெருப்பாக இந்திக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இந்தியை எதிர்த்து போராட வேண்டுமே தவிர யாரும் உயிர்விடும் செயலில் ஈடுபடக் கூடாது.

ராஜீவ்காந்தி (திமுக)

ராஜீவ்காந்தி (திமுக)

''இந்தி மொழி திணிப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தங்கவேல் தீக்குளித்து மரணித்திருப்பது உள்ளபடியே பெரும் வேதனையை தரும் நிகழ்வு. இது போன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக் கூடாது என்பது எனது வேண்டுகோள். ஒன்றிய அரசு இனியாவது இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க முன்வர வேண்டும்.''

தமிமுன் அன்சாரி(மஜக)

தமிமுன் அன்சாரி(மஜக)

''தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து ஒரு உயிர் அநியாயமாக பறிபோயிருக்கிறது என்பதை நினைக்கும் போது எனக்கு வேதனையாக உள்ளது. உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் யாருக்கும் இனி வரக்கூடாது என்பது எனது வேண்டுகோள். வாழும் வரை போராட்டம் நடத்த வேண்டுமே தவிர வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது. இந்த துயர நிகழ்வுக்கு பிறகாவது ஒன்றிய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளும் என நம்புகிறேன்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+