மஞ்சள் அலர்ட்.. சென்னையில் இரவிலிருந்து வெளுத்து வாங்கும் மழை.. மீண்டும் மழை நீர் தேங்கும் அபாயம்!
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. இரவில் இருந்து விடிய விடிய இருந்து பல்வேறு இடங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான இது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இன்னும் 12 மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை
இந்த நிலையில் சென்னைக்கு இன்றும், நாளையும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் அலர்ட் காரணமாக இரவில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இன்று சென்னையில் 12-20 செமீ வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த 1 மணி நேரமாக சென்னையில் விடாமல் மழை பெய்து வருகிறது.

சென்னை
இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை நீர் லேசாக வடிந்த நிலையில் மழையால் மேலும் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்து தீவிர கனமழை பெய்து வருகிறது.

தீவிரம்
குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் சாலைகளில் அதிக அளவில் நீர் தேங்கி வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
Recommended Video

புரட்டி எடுத்து வருகிறது
சென்னையில் மழை காரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் தற்போது 20.37 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. ஆனால் இன்றைய மழையால் மீண்டும் அங்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது வினாடிக்கு 2,000 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications