சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுமட்டும் நடந்தால்.. அடுத்த வாரத்தில் இருந்து ஞாயிறு முழு ஊரடங்கு கிடையாது.. மா.சு சொன்ன குட்நியூஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஞாயிறு லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இன்று தமிழ்நாடு முழுக்க அத்தியாவசியம் இல்லாத அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது பேருந்து போக்குவரத்து சேவை இன்று இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஞாயிறு ஊரடங்கு குறித்துபேசினார் .

10 ஆயிரத்தை தாண்டிய ஓமிக்ரான்... சற்றே குறைந்த கொரோனா.. மத்திய அரசு சொல்வது என்ன? 10 ஆயிரத்தை தாண்டிய ஓமிக்ரான்... சற்றே குறைந்த கொரோனா.. மத்திய அரசு சொல்வது என்ன?

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், கொரோனா தொற்று எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது. கேஸ்கள் வேகமாக உயர்ந்தது. அதனால்தான் ஞாயிறுகளில் முழு லாக்டவுன் போட்டோம். ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கேஸ்கள் குறையும் அறிகுறி தெரிகிறது. அது மனநிறைவாக இருக்கிறது.

ஞாயிறு முழு ஊரடங்கு

ஞாயிறு முழு ஊரடங்கு

தமிழ்நாட்டில் 3ம் அலையை குறைக்க தமிழ்நாடு அரசு வேகமாக முயன்று வருகிறது. அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். லாக்டவுன் கட்டுப்பாட்டு விதிகளை மக்கள் மதிக்க வேண்டும். வெளியே செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். சென்னையில் மட்டும் நேற்று 6000+ கேஸ்கள் வந்துள்ளது. இது முந்தைய நாட்களை விட குறைவான கேஸ்கள் ஆகும்.

தமிழ்நாடு லாக்டவுன்

தமிழ்நாடு லாக்டவுன்

முந்தைய நாட்களை விட நேற்று சென்னையில் குறைவாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னை மட்டுமின்றி இந்தியாவில் பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த வாரங்களில் கேஸ்கள் உயர்ந்த நகரங்களில் எல்லாம் தற்போது கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மூன்றாம் அலைக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

தளர்வு

தளர்வு

தமிழ்நாட்டில் கொரோனா குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது. கொரோனா தொற்றுக்கு முற்று ஏற்படும் போது மொத்தமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பெங்களூர், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இந்த மாத இறுதியோடு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலும் கேஸ்கள் குறைந்தால் தளர்வுகள் வரும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Sunday lockdown will be given up in coming weeks if cases go down says the health minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X