2 டோஸ் வேக்சின் போட்டபின்.. "மைல்ட்" கொரோனா பாதிப்பா? தமிழ்நாடு சுகாதாரத்துறை தந்த முக்கிய அறிவுரை
சென்னை: தமிழ்நாட்டில் லேசான அறிகுறியோடு கொரோனா பாதித்தவர்கள் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு 1,525 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 121 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று ஒருவருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டது. டெல்லியில் 351 பேருக்கும், குஜராத்தில் 136 பேருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பரவல்
இந்த நிலையில் ஓமிக்ரான் பரவல் தொடர்பாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். அதில், ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 அல்லது 4 நாட்களிலேயே நெகட்டிவ் என்று வந்துவிடுகிறது. ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கும். முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது.

மா. சுப்பிரமணியன்
2வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கழித்துதான் பூஸ்டர் டோஸ் போடப்படும். இவர்கள்தான் பூஸ்டர் போட தகுதியான நபர்கள். 15 வயது முதலான சிறார்களுக்கான வேக்சின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை உதவியுடன் நாளையில் இருந்து போடப்பட உள்ளது.

ஓமிக்ரான் தமிழ்நாடு
சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சைதாப்பேட்டையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட எல்லோரும் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள சில தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாடு பூஸ்டர் டோஸ்
இரண்டு டோஸ் வேக்சின் போட்டு அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் அது மைல்ட் கேஸாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். இரண்டு டோஸ் போட்டு கொரோனா வந்து லேசான கொரோனா ஏற்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது இல்லை.

தனிமைப்படுத்துதல் விதி
அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறலாம். இவர்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் கண்காணிக்கப்படுவார்கள், இவர்களுக்கு போதுமான மருத்துவ வழிகாட்டுதல்கள் மருத்துவ நிர்வாகம் மூலம் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications