ஸ்டாலின் காதில் "கிசுகிசுத்த" சீனியர்கள்.. வேற ஐடியா தந்த இளம் அமைச்சர்கள்.. குழப்பத்தில் கோட்டை..!
உள்ளாட்சி தேர்தல் தள்ளி போட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்
சென்னை: ஒருபக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் ஒமிக்ரான் என நெருக்கி கொண்டிருக்கும் நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமா? என்ற கேள்வி திமுகவுக்குள் எழுந்துள்ளதாம்..!
தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடக்க உள்ளது.. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
ஆனால், அதன்பிறகு எடப்பாடி முதல்வராக இருந்தபோது மறைமுக தேர்தல் நடத்த ஏற்பாடு நடத்தப்பட்டது.. ஆனால் அதற்குள், கொரோனா தொற்று பரவல் வந்துவிட்டதால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்த முடியாமல் போய்விட்டது.

திமுக அரசு
இப்போது திமுக 10 வருடம் கழித்து ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது.. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலும் விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது... தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.. அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது..

தேர்தல் தேதி
அநேகமாக பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஒருவேளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க முடியாது என்பதால்தான், பொங்கல் பரிசுத் தொகுப்பை முன்கூட்டியே தமிழக அரசு அறிவித்தது.. மேலும், பொங்கலுக்கு ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

ஏற்பாடுகள்
அதுமட்டுமல்ல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரியில் நடத்தும் முடிவில் தான், தேர்தலை எதிர்கொள்ளும் அனைத்து ஏற்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது திமுக தலைமை... இதற்காகத்தான், விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணலையும் நடத்திக் கொண்டிருக்கிறது.. ஆனால், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின். ஆனால் திடீரென மற்றொரு தகவல் ஒன்று கோட்டை பக்கம் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

சீனியர் அமைச்சர்கள்
உள்ளாட்சி தேர்தலை இப்போதே நடத்த வேண்டுமா? அதை தள்ளி வைக்கலாமே? என ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறார்களாம் சீனியர் அமைச்சர்கள்... ஆனால், இளம் அமைச்சர்களோ, எதிர்க்கட்சிகளின் பிரச்சார வேகத்தையும் வியூகத்தையும் கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகள் தான் உதவும். அதனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் போதே தேர்தலை நடத்திவிடலாம் என்கிறார்களாம்.. அதனால், இருவித குழப்பத்தில் முதல்வர் தரப்பு உள்ளதாம்..!
Recommended Video

ஒத்திவைப்பா?
இறுதியில் இது தொடர்பாக முடிவு எட்டப்பட்டும் என்கிறது கோட்டை வட்டாரங்கள்..! அதேபோல, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதா, இல்லையா என்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்களும் தெரிவித்துள்ளன...!
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications