சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று மாலை முதல் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் கனமழை.. மாண்டஸ் புயலின் தாக்கம் என்ன?.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று இரவு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டில் கூறியிருப்பதாவது: 6 மணி நேரத்தில் சூறாவளி புயலானது வலுவிழக்கும். இதனால் சென்னையில் மட்டும் இன்று இரவு முழுவதும் கனமழை பெய்யும்.

மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் மட்டும் பரவலாக மழை பெய்யும். இன்று மாலையோ அல்லது இரவோ புயலானது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை நெருங்கும் போது கனமழையும் காற்றும் வீசக் கூடும்.

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. மாண்டஸ் புயலால் சென்னையில் என்ன நடக்கும்? வெதர்மேன் முக்கிய வார்னிங் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. மாண்டஸ் புயலால் சென்னையில் என்ன நடக்கும்? வெதர்மேன் முக்கிய வார்னிங்

 விட்டுவிட்டு மழை பெய்யும்

விட்டுவிட்டு மழை பெய்யும்

அதுவரை விட்டுவிட்டு மழை பெய்யும். சென்னையில் மாண்டஸ் புயலால் பெய்த மழையின் அளவு மீ.மீ.ரில்: திருவிக நகரில் 82, அண்ணாநகர் மேற்கு 79 மி.மீ., கோடம்பாக்கம் 77, திருவொற்றியூர்- 75, தேனாம்பேட்டையி் 74 மி.மீ., ஐஸ் அவுஸ் பகுதியில் 72 மி.மீ. நந்தனம் 71, கொளத்தூர் 70, தண்டையார்பேட்டை 69, மாதவரம் 69.

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம் 68 மி.மீ., ராஜா அண்ணாமலைபுரம் 68 மி.மீ., மீனம்பாக்கம் 68 மிமீ, கத்திவாக்கம் 65 மி.மீ., பெரம்பூர் 63 மி.மீ. மழை, அமைந்தகரை- 62 மி.மீ. மழை, மணலி 62 மி.மீ. , புழல் 61 மி.மீ, புது மணலி டவுன் 60 மி.மீ, மெரினா- 56, முகலிவாக்கம்- 56 மி.மீ. அடையாறு- 54 மி.மீ., பெருங்குடி- 53 மி.மீ, எம்ஜிஆர் நகர் 51 மி.மீ., அயனாவரம்- 50 மி.மீ., ஆலந்தூர்- 50 மி.மீ, பாலவாக்கம்- 50 மி.மீ., தரமணி- 50 மி.மீ., வானகரம்- 50 மி.மீ. மழை பெய்துள்ளது.

 சூறாவளி புயல்

சூறாவளி புயல்

சூறாவளி புயலிலிருந்து மாண்டஸ் புயலாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கும். இது புயலாகவே சென்னையின் தெற்கு பகுதியில் இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும். கரையை நெருங்கும் நேரத்தில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசம். வர்தா புயலின் போது காற்றானது 120 கி.மீ. வேகத்தில் வீசியது.

டெல்டா மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை இருக்காது. புதுவையை தாண்டியுள்ள மாவட்டங்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சனிக்கிழமை காலை வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். அது போல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மழை உண்டு. இன்று மதியம் முதல் நாளை காலை வரை கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பிரதீப் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Tamilnadu Weatherman Prdeep John says severe cyclone weakens in the last 6 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X