சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக் ஆன காற்றழுத்த தாழ்வு பகுதி.. இனி என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட ஸ்பெஷல் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கி உள்ளார்.

Recommended Video

    அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    பொதுவாக காற்றழுத்த தாழ்வு பகுதி அல்லது தாழ்வு மண்டலம் உருவான பின் அது குறிப்பிட்ட திசையில் நகர்வதே வழக்கம். இப்படி நகரும் போது வளிமண்டல வெப்பநிலை, காற்றின் வேகத்தை பொறுத்து புயலாக மாறும்.

    சமயங்களில் இந்த தாழ்வு பகுதிகள் எங்கேயும் நகராமல் ஒரே இடத்தில் லாக் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது மிக மிக மெதுவாக நகரும் வாய்ப்புகளும் உள்ளது.

    லாக் ஆகும்

    லாக் ஆகும்

    இதற்கு முன் சில காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வங்ககடலிலும், சில தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் லாக் ஆன சம்பவங்கள் நடந்துள்ளன. வெப்பநிலை, காற்று வேகம், அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாழ்வு பகுதி இப்படி இடத்தில் நகராமல் சிக்கி தவிக்கும். இது போன்ற சமயங்களில் அந்த தாழ்வு பகுதிகள் சிக்கி இருக்கும் சுற்றுவட்டாரத்தில் மிக அதிக கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

     தமிழ்நாடு வெதர்மேன்

    தமிழ்நாடு வெதர்மேன்

    தற்போது வங்கக்கடலில் உருவாகி இருக்கும் தாழ்வு பகுதியும் தமிழ்நாட்டில் இப்படி லாக் ஆகும் நிகழ்வு ஏற்படலாம் என்று ஏற்கனவே பல்வேறு வானிலை அறிவிப்புகள் குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு வெதர்மேனும் இதை பற்றி விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி சிக்கி இருக்கும் காரணத்தால் கடலோர மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் ஆக்டிவ் மழை இருக்கும்.

    சென்னை

    சென்னை

    சென்னையை பொறுத்தவரை மிதமான மழை இன்று பெய்யும். நாளையில் இருந்து டிசம்பர் 1 வரை மழை தொடர்ந்து அதிகரிக்கும். நாம் அதிகம் எதிர்பார்த்த அந்த மழை இன்றுதான் தமிழ்நாட்டில் பெய்ய போகிறது. தென் தமிழ்நாடு வரையிலான கடலோர பெல்ட் மொத்தமாக மழையை பெற போகிறது. எந்தெந்த மாவட்டங்களில் பெய்யும் என்று தனிப்பட்ட வகையில் கூற இயலாது. தூத்துக்குடி, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நெல்லை மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.

     சென்னை

    சென்னை

    சென்னையில் இன்று விட்டு விட்டு மழை பெய்யும். நவம்பர் 27 முதல் 1ம் தேதி வரை சென்னையில் மழை தீவிரம் எடுக்கும். இதற்கு முன் பெய்த மழைகள் போல இது 1 நாளில் பெய்துவிட்டு நின்றுவிடாது.. மாறாக இந்த மழை 4-5 நாட்களுக்கு பெய்யும். ஆனால் இதன் அர்த்தம் விடாமல் பெய்யும் என்பதல்ல. விட்டு விட்டு பிரேக் எடுத்து மழை பெய்யும். இரவில் இருந்து அதிகாலை வரை கனமழை பெய்யும். சமயங்களில் பகல் நேரத்திலும் கனமழை பெய்யும்.

    கடந்த கால காற்று ஒப்பீடு

    நவம்பர் 15-16 2015 மற்றும் டிசம்பர் 1-2, 2015 வரையிலான காற்று ஒப்பீடு புகைப்படத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது பெய்ததை போலவே இப்போது மழை பெய்யும் என்று சொல்ல வரவில்லை. மாறாக அப்போது காற்றழுத்த தாழ்வு பகுதி லாக் ஆனதால் அதிக மழை பெய்தது. அதேபோல் இப்போது காற்றழுத்த தாழ்வு பகுதி லாக் ஆன காரணத்தால் நவம்பர் 26 முதல் டிசம்பர் 1 வரையிலான நாட்களில் குறைந்தது 1-2 நாட்களுக்கு தீவிர மழை பெய்யும்.

    எங்கே பெய்யும்

    எங்கே பெய்யும்

    ஆனால் எங்கே பெய்யும் என்பதுதான் கேள்வி. நெல்லூருக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே எங்கே வேண்டுமானாலும் தீவிர கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதில் எங்கு வேண்டுமானாலும் மழை மொத்தமாக பெய்யலாம். இந்த தீவிர மழை பெய்யாமல் கடந்த முறையை போலவே இந்த முறையும் நாம் எஸ்கேப் ஆவோம் என்று நம்புவோம். இருந்தாலும் இது பெரிய தாழ்வு பகுதி என்பதால் கண்டிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வது உறுதி என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tamilnadu Weatherman special post on locked low pressure in Bay of Bengal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X