எந்த பந்து போட்டாலும் அக்கா சிக்ஸர் விளாசுதே.. கலகலக்கும் தமிழிசை டிவீட்!
மு.க. ஸ்டாலினை கண்டித்து தமிழிசை ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: "திமுகவும்...நமதே! திகாரும்...நமதே!" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்க... நெருங்க... ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஒருவரையொருவர் வாரி வறுத்தெடுத்து வருகிறார்கள்.
அதிலும் மு.க.ஸ்டாலினும், தமிழிசையும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேகத்தில் உள்ளனர். எவ்வளவுதான் தங்கள் கட்சிக்குள் பிரச்சனைகள், சலசலப்புகள், பஞ்சாயத்துகள், இருந்தாலும், ரெண்டு பேரும் ட்வீட் போட்டு தாக்கி கொள்வதை மட்டும் ஒருநாளும் மறப்பது இல்லை.

உதயசூரியன்
அதனால் தாமரை என்ற வார்த்தையை ஸ்டாலினும், உதயசூரியன் என்ற வார்த்தையை தமிழிசையும் ஒருத்தருக்கொருத்தர் தங்களையும் அறியாமல் அதிகமாகவே தங்கள் ட்வீட்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.
|
விடாமல் சிக்ஸர்
ஸ்டாலின் எவ்வளவுதான் பாஜகவை வாரினாலும், தமிழிசையும் அதற்கு முட்டு கொடுத்து கொண்டே பதிலடிகளை விடாமல் கொடுத்து விடுகிறார். இன்றும்கூடி தமிழிசை சவுந்தராஜன் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

திகாரும் நமதே
அதில் அவர், "நாடும் நமதே நாற்பதும் நமதே. என்று கனவுகாணும் ஸ்டாலின் அவர்களே,! ஊழல் சர்க்கார் நமதே! ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த திமுக ஊழல்ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! திமுக...நமதே! திகாரும்...நமதே! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் பதிலடி?
என்றைக்கோ நடந்த சர்க்காரியா விவகாரத்தை இப்போது ஸ்டாலினுடன் முடிச்சி போட்டு பதிவிட்டிருக்கிறார் தமிழிசை சவுந்தராஜன். இதற்கு திமுக தலைவர் என்ன பதிலடி தர போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications