இபி பில் கட்டவே தேவை இல்லை.. சர்ரென குறையும்.. மின்சார வாரியத்தின் சூப்பர் மூவ்.. இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மேற்கூரை சோலார் பேனல்கள் அமைப்பதற்கு என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. வீட்டிற்குத் தேவையான சூரிய கூரை திறன் கணக்கீடு செயலியை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இதை பயன்படுத்தி மின்சார கட்டணம் இன்றியே வீட்டிற்கு தேவையான மின் தேவைகளை சமாளிக்க முடியும்.

தமிழ்நாடு அரசு இதற்கான செயலியை வெளியிட்டு உள்ளது. உங்கள் வீட்டிற்கு தேவையான சோலார் மின்சாரத்தை கணக்கிட வழி உள்ளது. இதற்காக நீங்கள் https://www.pmsuryaghar.gov.in/rooftop_calculator என்ற அரசின் அதிகாரபூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

tangedco eb

இதில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். உங்களின் மாநிலம், உங்கள் மின்சார இணைப்பு விவரம், நீங்கள் இதுவரை சராசரியாக கட்டும் மாத மின் கட்டணம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

அதன்பின் அரசின் புரிதலுக்காக நீங்கள் கூடுதல் தகவல்களை கொடுக்க வேண்டும். Total Available Roof Top Area.. அதாவது உங்கள் வீட்டிற்கு மேலே இருக்கும் இடத்தின் அளவு எவ்வளவு என்று குறிப்பிட வேண்டும். எவ்வளவு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்று கொடுக்க வேண்டும்.

இதை கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு சோலார் மின்சாரம் தேவை என்று கணக்கு வழங்கப்படும். இதை வைத்து வீட்டிற்கு மேலே சோலார் பேனல் அமைப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.

எப்படி இணைப்பை பெறுவது?: மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு வரவேற்று வருகிறது. அதன்படி இதற்காக வழங்கப்படும் மானியம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி மேற்கூரை சூரியசக்தி மின் மூலம் 10 கிலோ வாட் வரை அமைக்க அனுமதி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடு உள்ளிட்ட கட்டடங்களில் 10 கிலோ வாட் வரை அமைக்க ஒப்புல் பெற வேண்டியது இல்லை. தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் இல்லாமல் இதற்கான பணிகளை செய்ய முடியும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறி உள்ளது.

ஆய்வு: இதற்கு நேரடியாக மின்சார வாரியம் மூலம் அனுமதி பெற்றால்.. உடனே இபி அதிகாரிகள் வீட்டில் வந்து சோதனை செய்வார்கள். வீடுகளில் அதற்கான வசதிகள் இருக்கிறதா.. வீட்டில் சோலார் வைப்பதற்கு சாதகமான சூழல் இருக்கிறதா என்று ஆய்வுகளை மேற்கொள்வார்கள். ரூ.15,000 முதல் ரூ. 18,000 ரூபாய் இலவச சோலார் மின்சாரத்தில் இருந்து ஆண்டுக்கு சேமிக்கலாம். உபரி மின்சாரத்தை மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்காக விநியோக நிறுவனங்களுக்கு கொடுக்கலாம்.

மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், உங்கள் வீட்டிற்கு சூரிய மேற்கூரை மூலம் சூரிய ஒளியின் பரிசை கொடுங்கள்!
1 கிவா ரூ30,000/-
2 கிவா ரூ 60,000/-
3 கிவா ரூ 78,000/- வரை மானியம். வழங்கப்படும்.
பூமியை பசுமையாக வைத்திருக்க உதவுங்கள். இணைய தளத்தில் முதலில் பதிவு செய்யவும். அடுத்து, விண்ணப்பியுங்கள்!

முக்கிய அறிவிப்பு: 1. உங்கள் வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் மேற்கூரையில் சோலார் அமைக்க வேண்டும்.

2. பொதுவாக மேற்கூரையில் சோலார் அமைக்க சதுர அடி பொறுத்து 50 ஆயிரம் முதல் 2-3 லட்சம் வரை செலவு ஆகும்.

3. மேற்கூரையில் சோலார் அமைத்தால் வீட்டில் பெரும்பாலும் மின்சார தேவை பூர்த்தி ஆகிவிடும். மழை காலம், பனி காலத்தில் 1-2 மணி நேர மின்சார நிலையத்தின் மின்சார சப்ளை தேவை மட்டும் இருக்கும்.

4. நீங்கள் மேற்கூரையில் சோலார் வைத்துள்ளதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.

5. அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அந்த குறைந்த பட்ச மின்சார தேவையை அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம்தான் இது.

6. பொதுவாக மேற்கூரையில் சோலார் இருந்தால்.. மாதம் உங்களுக்கு மின்சார வாரியத்தின் மின்சாரத்தில் 100 யூனிட் கூட அவசியம் இருக்காது. இருந்தாலும் நீங்கள் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்த முடியும்.

7. மேற்கூரையில் சோலார் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+