டாஸ்மாக் அதிரடி.. "இந்த" நாட்களில் டாஸ்மாக் இயங்காது.. தமிழக அரசு அறிவிப்பு.. திகுதிகு திருப்பத்தூர்
சென்னை: தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இது குடிமகன்களுக்கான அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது.
திருப்பத்தூர் அருகே அரசு மதுபான கடையை அகற்றக் கோரி 5 வது நாளாக மதுக்கடை முன்பே சமைத்து சாப்பிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 4 நாட்களாகவே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் போராட்டம் தமிழகத்தின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. வெளியாத்தூர் விலக்குபகுதியில் திருப்பத்தூர் கண்டரமாணிக்கம் சாலையில், புஞ்சை நிலத்தில் புதிதாக அரசு மதுபான கடையை திறப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
திருப்பத்தூர்: இதைப்பார்த்துமே கொந்தளித்து போன திருப்பத்தூர் மக்கள், எதிர்ப்பு தெரிவித்தும், அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கண்டரமாணிக்கம், வெளியாத்தூர், சாத்தனூர், கொங்கரத்தி நைனார்பட்டி என கிட்டத்தட்ட 5 கிராம மக்கள், மதுபான கடை வாசலிலேயே உட்கார்ந்துவிட்டார்கள்.
விவசாய நிலங்கள்: இதற்கெல்லாம் காரணம், இந்த கிராமங்களில் வசித்து வரும் பெண்கள், இங்குள்ள புஞ்சை நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு வந்து விடுவார்கள்.. விவசாய காலங்களில் இரவு நேரம் பாராமல் பகுதியில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருபவர்கள்.. அப்படியிருக்கும்போது, திடீரென டாஸ்மாக் திறக்கப்பட உள்ளதால், அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதனால்தான், போராட்ட களத்திலேயே, சோறு சமைத்து சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பத்தூர் விவகாரம் ஒருபக்கம் வெடித்து கொண்டிருக்க, தமிழ்நாட்டில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2ம் ஆகிய 2 நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
கடும் நடவடிக்கை: இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மிலாடி நபி செப்டம்பர் 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த 2 நாட்களும் அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மேற்கண்ட 2 நாட்களில் மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, யாராவது மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
-
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் எவை எவை..? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications