சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலமைச்சர், அமைச்சர்களின்றி பொலிவிழந்த ஆளுநரின் தேநீர் விருந்து.. அதிமுக, பாஜக பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: நீட் விலக்கு உள்ளிட்ட தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 11 தீர்மானங்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டதை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.

7 தமிழர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

18 நாளில் 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்... மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு சிக்கலா? என்ன நடக்கிறது?18 நாளில் 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்... மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு சிக்கலா? என்ன நடக்கிறது?

கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், இதனால் அவரை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பிரதமருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு

பிரதமருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு

அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியதுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும் புகாரளித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தகவல் வெளியானது.

ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு

ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டின்போது ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது மரபு. தமிழ் புத்தாண்டான இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கூட்டணி கட்சிகளின் பதிலடி

கூட்டணி கட்சிகளின் பதிலடி

ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு தீர்மானம், ஏழு தமிழர் விடுதலை தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்றாத ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சிகள் அறிவித்தனர். அதேபோல் கூட்டணியில் அல்லாத பாமகவும் தேநீர் விருந்தை புறக்கணித்தது.

தமிழக அரசும் புறக்கணிப்பு

தமிழக அரசும் புறக்கணிப்பு

இந்த நிலையில் இன்று காலை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு, ஆளூநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்தார்.

பொலிவிழந்த தேநீர் விருந்து

பொலிவிழந்த தேநீர் விருந்து

இதனை தொடர்ந்து இன்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தலைமையில் தேநீர் விருந்து தொடங்கியது. இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை கலந்துகொண்டன. ஏற்கனவே அறிவித்தபடி தமிழக அரசு தரப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. அதேபோல் புறக்கணிப்பதாக அறிவித்த கூட்டணி கட்சியினரும் இதில் கலந்துகொள்ளாததால் பொலிவிழந்த காணப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தலைமையில் தேநீர் விருந்து தொடங்கியது. இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை கலந்துகொண்டன. ஏற்கனவே அறிவித்தபடி தமிழக அரசு தரப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. அதேபோல் புறக்கணிப்பதாக அறிவித்த கூட்டணி கட்சியினரும் இதில் கலந்துகொள்ளாததால் பொலிவிழந்த காணப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார் ஆர்.என்.ரவி. 2014 ஆம் ஆண்டு நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் குழுவுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக செயல்பட்டார் ஆர்.என்.ரவி. பின்னர் மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பதவியேற்கும் முன்பே எதிர்ப்பு

பதவியேற்கும் முன்பே எதிர்ப்பு

நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது அம்மாநில மக்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவருக்கு நாகா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை காரணம் காட்டி அவரை தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆளுநராக பொறுப்பேற்ற அவர், ஏழு தமிழர் விடுதலை தொடர்பாகவும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரியும் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தீர்மானங்களை கிடப்பில் போடும் ரவி

தீர்மானங்களை கிடப்பில் போடும் ரவி

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால் மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதையும் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர் ரவி. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என, ஆளுநரின் அதிகாரத்தை திருத்தம் செய்திட வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானத்தை திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister MK Stalin has boycotted a tea party at the Governor's House today, condemning the Governor for not approving 11 resolutions passed by the Tamil Nadu government, including the NEET exemption:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X