தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவு - தலைவர்கள் இரங்கல்
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி,78 அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்
சென்னை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயாரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களின் மனைவி கிருஷ்ணகுமாரி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
Recommended Video
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்...

என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தலைவர்கள் இரங்கல்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தாயாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் திருமதி.கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். மறைந்த திருமதி கிருஷ்ணகுமாரி, மூத்த காங்கிரஸ் தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களின் துணைவியார் ஆவார்.

அன்புத் தாயாரை இழந்து வாடும் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாயார் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!!! என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், " காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் அவர்களின் மனைவியும் ,மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயாருமான கிருஷ்ணகுமாரி அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உற்ற துணை இழந்து வாடும் குமரி அனந்தன் அவர்களுக்கும், தாயை இழந்த துயரத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்
எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "தெலுங்கானாஆளுநர்,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்களின் தாயார் திருமதி. கிருஷ்ணகுமாரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்பு சகோதரிக்கு என் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications