Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசிரியர் தகுதி தேர்வில் 14% பேர்தான் பாஸ்..சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் - டிஆர்பி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களில் 14 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு டெட் தேர்வினை 1,53,233 பேர் எழுதிய நிலையில் தேர்ச்சி விகிதம் அதிக அளவில் குறைந்துள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன.

TET exam result: TRP annonces Only 14% Pass in TET Certificate Download

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 100 சதவீதம் நேரடி நியமன முறையிலும், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் எஞ்சிய 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆகவும், ஓய்வு பெறும் வயது 58 ஆகவும் இருந்தது. பின்னர் பணியாளர்களின் ஓய்வுக்கான வயது வரம்பு 60 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் பணி நியமத்திற்கான உச்ச வரம்பு 40 வயதாக குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல்முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு செய்யப்படும் நியமனங்களுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021 செப்டம்பர் 9ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது.

முதல் தாள் தேர்வு கணினி வழித் தேர்வாக கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1,53,533 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, அக்டோபர் மாதம் 28ம் தேதி தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளிடயிடப்பட்டது. தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28.10.2022 முதல் 31.10.2022 தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

3696 ஆட்சேபனைகள் பெறப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குபின் பாட வல்லுநர்குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. கடந்த 7ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் வெளியானது. இந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022 - ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 - ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 ற்கான கணினி வழித்தேர்வுகள் கடந்த 14.10.2022 முதல் 19.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்பட்டது . இத்தேர்வில் 1,53,233 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

இத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 07.12.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது . 21,543 தேர்வர்கள் இத்தேர்வில் தகுதி பெற்றுள்ளனர் . 23.07.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கைச் செய்தியின்படி , அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.07.2022 முதல் 27.07.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது . எனவே , விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது அளிக்கும் கோரிக்கையின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது தெரிவிக்கப்படுகிறது.

தற்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I- ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழை இன்று முதல் மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+