Thaimaman Thanga Modhiram Govt Scheme: விஜய் தரும் தாய்மாமன் தங்க மோதிரம், தகுதிகள்.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கொண்டுவந்துள்ள 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் என்பது தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சார அடையாளத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன் தாய்மாமன் சீர் செய்வது வழக்கம். அதேபோன்று முதல்வர் விஜய், பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தாய்மாமனாக மாறிச் சீர் செய்வது போன்றதொரு உணர்வுப்பூர்வமான (சென்டிமெண்ட்) திட்டமாக இந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும், தாய்மாமன் தங்க மோதிரம் குழந்தை மருத்துவமனையை விட்டுச் செல்லும்போது வழங்கப்படவுள்ளது.

கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்தக் கட்டுரையில் இத்திட்டத்திற்கான தகுதி, தேவையான ஆவணங்கள், பதிவு செய்யும் முறை, மோதிரம் பெறும் வழிமுறை ஆகியவற்றைத் தெளிவாகப் பார்ப்போம்.

Thaimaman Thanga Modhiram Eligibility and full details to receive the gold ring gifted by Vijay

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் 22 காரட் (916 தரம்) தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. அந்த மோதிரத்தில் தமிழ்நாடு அரசின் சின்னம், BIS ஹால்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட வரிசை எண் (Serial Number) ஆகியவை இருக்கும். இது 'டேம்பர்-ப்ரூஃப்' (Tamper-proof) பேக்கிங்கில் பாதுகாப்பாக வழங்கப்படவுள்ளது. ஆண்டுக்குச் சுமார் 4.2 முதல் 4.4 லட்சம் குழந்தைகள் இதனால் பயன்பெறுவார்கள். இதற்காகத் தமிழக அரசு ஆண்டுக்குச் சுமார் ₹755.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த மோதிரங்கள் ஜோய் ஆலுக்காஸ் (Joyalukkas) மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் (Kalyan Jewellers) போன்ற முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

தகுதிகள் என்ன?

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெறக் கீழ்க்கண்ட நிபந்தனைகள் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்:

தாய் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது தற்காலிகமாக வந்து தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு இத்திட்டத்தில் தகுதி இல்லை.

குழந்தை அரசு மருத்துவமனை அல்லது அரசு சுகாதார மையம் (ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை) ஆகியவற்றில் பிறந்திருக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படாது.

தாய் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) அமைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன்படி RCH ID (Reproductive and Child Health Identity Number) பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், கர்ப்பிணிகளுக்கு முன்பு அரசு ₹12,000 உதவித்தொகையை 3 தவணைகளாக வழங்கி வந்தது; இப்போது அதே நிதிதான் தங்க மோதிரம் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் பெறக் குழந்தை ஜூன் 22, 2026-க்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

பாலினம், பிறப்பு வரிசை (முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை என எந்த வரிசையாக இருந்தாலும்) எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் இரண்டு மோதிரங்கள் வழங்கப்படும். பலமுறை பிரசவித்த தாய்மார்களுக்கும் இதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அதாவது எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் தங்க மோதிரம் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

தாய்மாமன் தங்க மோதிரம் பெற விரும்பும் கர்ப்பிணித் தாய் கீழ்க்கண்ட முகவரி ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்:

குடும்ப அட்டை (ரேஷன் கார்டு - தமிழ்நாட்டில் வழங்கப்பட்டது)

வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)

ஆதார் அட்டை

தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை

அஞ்சல் துறை முகவரிச் சான்று

இருப்பிடச் சான்றிதழ் அல்லது பிறப்பிடச் சான்றிதழ்

கூடுதலாகக் கட்டாயம் தேவைப்படும் ஆவணங்கள்:

தாயின் ஆதார் அட்டை

PICME பதிவுச் சான்று / RCH ID கார்டு

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனை பிரசவப் பதிவு சான்று

தங்க மோதிரம் எப்போது கிடைக்கும்?

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும்போதே மேற்கண்ட ஆவணங்களைச் சரிபார்த்து மோதிரம் வழங்கப்படும். சில இடங்களில் முக அடையாளம் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பும் நடைபெறும்.

பதிவு செய்வது எப்படி?

மோதிரம் பெறுவதற்காக ஆன்லைனில் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்தால் தானாகவே தகுதிகளைச் சரிபார்த்து டிஸ்சார்ஜ் ஆகும் போது வழங்கிவிடுவார்கள்.

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை:

கர்ப்பம் தரித்த 3 மாதத்திற்குள் அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தில் PICME பதிவு செய்து RCH ID பெறவும். பிரசவம் அரசு மருத்துவமனையில் நடக்க வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது, அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்துக் குழந்தைக்குத் தங்க மோதிரம் தருவார்கள்.

தங்க மோதிரம் எங்கே வழங்கப்படும்?

மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களில் மோதிரம் வழங்கப்படுகிறது. அருகிலுள்ள மையத்தை அணுகி ஆவணங்களுடன் செல்ல வேண்டும். செப்டம்பர் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை பிறந்த குழந்தைகள் அங்குச் சென்று ஆவணங்களைக் காட்டி மோதிரம் வாங்கலாம். ஆனால் செப்டம்பர் 28, 2026 முதல் (இன்று முதல்) பிறக்கும் குழந்தைகளுக்கு, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும்போதே நேரடியாக மோதிரம் வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு:

கர்ப்பம் தரித்த பின் அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தில் PICME பதிவு செய்து RCH ID பெற்றிருக்க வேண்டும். அப்படிப் பதிவு செய்யாதவர்கள் தங்க மோதிரம் பெற முடியாது. தனியார் மருத்துவமனையில் பிறந்து, பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் மோதிரம் கிடைக்காது. அதேபோல் முறையான முகவரி ஆவணங்கள் இல்லாவிட்டாலும் மோதிரம் கிடைக்க வாய்ப்பில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+