தஞ்சாவூரில் மகிழ்ச்சி.. கும்பகோணம் போறீங்களா? மறுபடியும் சர்ப்ரைஸ் தந்த தமிழக அரசு.. மக்கள் ஹேப்பி
சென்னை: தமிழக அரசு மீண்டும் ஒரு நற்செய்தியை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.. இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோவில்களின் நகரம் என்பார்கள்.. இந்த கும்பகோணத்தை சுற்றி நவக்கிரக தலங்கள் நிறைய உள்ளன.. எனவே, தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், இங்கு வந்து பரிகாரங்களை செய்துவிட்டு செல்வார்கள்.

ஆனால், அப்படி கும்பகோணம் வரும் பக்தர்கள், டாக்ஸி அல்லது ஆட்டோ மூலமாகவே, ஒவ்வொரு வழிபாட்டு தலங்களுக்கும் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. இதனால், பணமும் அதிகமாக செலவாகிறது.. நேரமும் வீணாகிறது.
கோயில்கள்: அதனால்தான், நவக்கிரக கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் நவக்கிரக தலங்களை இணைத்து புதிய வழித்தடத்தில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என்று சுற்றுலாபயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியது.
கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே பஸ்ஸில் பயணம் செய்து, மறுபடியும் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கே வந்தடையும் வகையில் "நவகிரக சிறப்பு பேருந்துகள்" கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார்.
மீண்டும் அதிரடி: எந்த ஒரு சிரமமுமின்றி, ஒரே பஸ்சில் பயணம் செய்வதால், இந்த அறிவிப்பானது பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது.. இதையடுத்து, வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க குளிர்சாதன வசதியுடன் (AC வசதி) இன்னொரு கூடுதலாக சிறப்பு சுற்றுலா பஸ் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று மீண்டும் அமைச்சர் சிவசங்கர் குட்நியூஸ் அறிவித்திருக்கிறார்.
இந்த பஸ்சில் நபர் ஒருவருக்கு ரூ.1350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.. வாரத்தில் 7 நாட்களுமே, அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு நவகிரக தலங்களுக்கு சென்று இரவு 8 மணியளவில் மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும்.
முன்பதிவு: அதனால், இந்த பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற வெப்சைட் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக பஸ்சில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள முடியாது.. இந்த தகவல்கள் அனைத்தையும், கும்பகோணம் போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications