12 வருடமாக பொருளாளராக இருந்தேன்.. கோர்ட் தீர்ப்பு குறித்து ஆதரவாளர்கள் மத்தியில் மனம் திறந்த ஓபிஎஸ்
சென்னை: தினம் தினம் எத்தனை தீர்ப்பு வந்தாலும் ஆதரவு தரும் தொண்டர்களுக்கு நன்றி என்று தேனியில் நடைபெற்ற மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தேனியில், நடந்த மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் பேசியதாவது:- தினந்தோறும்.. வாரந்தோறும்.. மாதந்தோறும் தீர்ப்புகள் வந்தாலும்.. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும், "நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள் எங்களுக்காக நீங்கள் அந்த இலக்கை நோக்கி வீரநடைபோட்டு கொண்டிருக்கிறீர்கள்.. எங்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு தான் என்று தொண்டர்கள் இன்றைக்கு முழு ஆதரவு தந்து..

நாங்கள் செல்லும் இடத்திற்கு எல்லாம் எங்களை வரவேற்று.. நீங்கள் எடுத்திருக்கிற கொள்கை, நீங்கள் செல்கின்ற பாதை இவைகள் எல்லாம் எம்ஜிஆர், ஜெயலலிதா நடந்து சென்ற பாதை என்ற அடிப்படையில், மிகப்பெரிய ஆதரவை அளித்து வரும் மக்களுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதை மனமார தெரிவித்துக்கொள்கிறேன். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. யாராலும் வெல்ல முடியாத வகையில் 3 முறை எம்ஜிஆர் ஆட்சியமைத்து முதல்வராக இருந்தார்.
அதிமுக தொண்டர்களா? ரொம்ம நல்லவங்கப்பா என்று மற்றவர்கள் பாராட்டுகிற வகையில் இயக்கத்தை இரு தலைவர்களும் வழி நடத்தினார்கள். ஒரே ஒரு சட்டவிதியை மட்டும் எம்ஜிஆர் மாற்றம் செய்யக்கூடாது.. திருத்தம் செய்யக்கூடாது என்று தெரிவித்து இந்த சட்டவிதியை உருவாக்கியிருந்தார். தொண்டர்கள் தான், கழகத்தின் உச்சப்பட்ச பதவியான பொதுச்செயலாளர் பதவி. இந்த பதவியை தேந்தெடுக்கின்ற பொறுப்பு.. உரிமை தொண்டர்களுக்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கூறியிருந்தார்.
அதுவும் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தொண்டனும் ஓட்டு போட்டு பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார். இது தொண்டர்களுக்கு எம்ஜிஆர் தந்த உரிமை. இந்த உரிமை தற்போது பறிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுகவில் 12 ஆண்டுகள் பொருளாளர் பதவியை ஜெயலலிதா எனக்கு கொடுத்திருந்தார். நான் தான் பொருளாளர். நான் தான் அறிக்கையை வாசிக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது. எனக்கு அந்த வாய்ப்பை கூட வழங்கவில்லை. அதற்குள் பொதுக்குழுவில்ல் நன்றி உரை வாசிக்க தொடங்கிவிட்டனர். அதற்கு பின் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications