துபாய் டூ சென்னை.. உயிருக்கு போராடியபடி வந்த சபியுல்லா.. நெகிழ வைத்த சென்னை டிராபிக் போலீஸ்
சென்னை: துபாயில் உடல் நிலை பாதிப்பால் உயிருக்கு போராடி மேல்சிகிச்சைக்காக சென்னை வந்தவர், போக்குவரத்து போலீசாரின் உதவியால் நெரிசல் இன்றி சென்று ராஜீவ காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு சென்னையில் மருத்துவ வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதில் இருந்தும் பலரும் புற்றுநோய், கல்லீரல் பிரச்சனை, இதய அறுவை சிகிக்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உயர்சிகிச்சைகாக சென்னை வருகிறார்கள்.

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளில் இருந்தும் பலரும் சென்னைக்கு தான் மருத்துவ சிகிக்சை பெற அதிக அளவில் வருகிறார்கள். சென்னையில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற தனியார் மருத்துவமனைகள் உள்ளன. ஓமந்தூரார், ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் , எழும்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளும் சென்னையில் தான் இருக்கின்றன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தில் சிறப்பு அம்சம் கொண்டவை. உதாரணத்திற்கு கீழ்பாக்கம் மருத்துவமனை தீ தடுப்பு காயத்திற்கும். தாம்பரத்தில் உள்ள மருத்துவமனை காச நோய்க்கும், ஓமந்தூர் ஸ்கேன் மற்றும் பல்வேறு உயர் சிகிச்சைக்கும், ஸ்டான்லி அறுவை சிகிக்சைக்கும் புகழ் பெற்றவை, ராஜீவ் காந்தி மருத்துவமனை எல்லா வகையான சிகிச்சைகளும் உள்ள பெரிய மருத்துவமனையாகும்.
சென்னையில் அப்பல்லோ, காவேரி, மலர், மியாட் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளும் மிகப்பெரிய அளவில் வசதிகள் கொண்டுள்ளவை ஆகும். இதனால் பலரும் மருத்துவ கிசிச்சைக்காக சென்னை வருகிறார்கள். மருத்துவ டூர் விசா பெற்று வெளிநாட்டினர் பலரும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். வெளிநாடுகளில் பல லட்சம் ஆகும் என்றால் என்றால் இங்கு மிகமிக கட்டணம் குறைவு, மற்றும் தரமான வசதி உள்ளிட்டவை காரணம் ஆகும்.
சென்னைக்கு அப்படித்தான் ஒருவர் சிகிச்சை பெற வந்தார். அவருக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை செய்த உதவிக்காக அவர் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டிருந்த பதிவில், "துபாயில் உயிருக்கு போராடி மேல்சிகிச்சைக்காக சென்னை விமான நிலையம் வந்த சபியுல்லா, விமானநிலையம் முதல் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்ல சென்னை போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு அவரது குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் தங்களது நன்றியை தெரிவித்தனர்." என்று கூறப்பட்டுள்ளது.
இதை பார்த்த நெட்டிசன்கள், இதுதான் சார் மனிதநேயம்.. உங்களுக்கு எங்களது நன்றிகள் என்று பாராட்டி வருகிறார்கள். இதுபோன்ற சேவைகளை செய்த அனைத்து போலீசாருக்கும் நன்றி என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications