அடுத்த எம்ஜிஆர் ஓபிஎஸ் தான்..ஏடாகூட இபிஎஸ்! திமுகவுடன் எடப்பாடி கூட்டணி! ஷாக் தரும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : அதிமுகவில் அடுத்தடுத்து மா.செ.க்கள் கூட்டம் ஆலோசனைகள் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சென்னையில் அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் எடப்பாடியை ஒருமையில் பேச என்ன காரணம்? அந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் இருவருக்குமிடையிலேயான மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. ஓபிஎஸ்ஸை இபிஎஸ்ஸோ, இபிஎஸ்ஸை ஓபுஎஸ்ஸோ மறைமுகமாகவே விமர்சித்து வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற அதிமுக ஓபிஎஸ் தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அரங்கேறிய நிகழ்வுகள், அதற்கு நேர்மாறாக அரங்கேறின. ஆரம்பத்தில் இருந்து இபிஎஸ்ஸை 'அண்ணன் எடப்பாடி பழனிசாமி' அவர்கள் என பேசி வந்த ஓபிஎஸ் ஒருமையில் வசைபாடியது அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமியால் அதிமுக இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதற்கு பின்னர் 88 மாவட்ட செயலாளர்கள் நியமித்டுள்ளார். மேலும் தலைமைக் கழகம், சார்பு அணிகள் என 100க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

என்ன காரணம்?
இதில் கலந்து கொண்ட அதிமுக ஓபிஎஸ் திண்டுக்கல் மாவட்ட செயலாளரான சுப்பிரமணியன் ஒன் இந்தியா தமிழிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"அதிமுகவில் தற்போது நடந்து வரும் அனைத்து விவகாரங்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என 23 தீர்மானங்களில் ஓ.பன்னீர்செல்வத்திடம் கையெழுத்து பெற்றுவிட்டு ஆனால் அவை அனைத்துமே செல்லாது என பேசியது அவர் தரப்பு தான். உள்ளரங்கத்தில் நடந்தவற்றை பொதுவெளியில் உடைத்து பேசி அதிமுகவுக்குள் வேண்டும் என்று பிரச்சனையை ஏற்படுத்தியது எடப்பாடி தரப்பு தான்.

சிவி சண்முகம்
ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இரவோடு இரவாக டைப் செய்யப்பட்ட படிவங்களை உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. பொதுக்குழுவில் தீர்மானங்கள் செல்லாது என சிவி சண்முகம் பேசியது நாகரீகத்தையே சிதைத்து விட்டது. தற்போது எடப்பாடி தரப்பில் இருக்கும் அனைவருமே பதவிக்காகவே அவரோடு இருக்கிறார்கள். எங்களுடன் பலரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாகரீகம் கருதி அதனை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் வரும் காலங்களில் எடப்பாடி தரப்பிலிருந்து பலரும் ஓபிஎஸ் தரப்புக்கு வர இருக்கிறார்கள். ஜனவரி மாதத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் பல அதிரடிகள் அரங்கேருவது நிச்சயம்.

தொண்டர்கள் தான் கட்சி
லட்சக்கணக்கான தொண்டர்களை புறக்கணித்துவிட்டு எடப்பாடி பின்னால் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் தான் கட்சி என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் உரிய பாடம் புகட்டப்படும். எம்ஜிஆர் கருத்து ஜல்லிதாவுக்கு அடுத்து தானாகவே மக்கள் கூட்டம் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்குத்தான் வருகிறது. எடப்பாடி அணியினர் பணம் கொடுத்து அழைத்து வருகின்றனர். ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை லட்சோப லட்சம் தொண்டர்கள் தாங்களாகவே கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என எங்கள் பின்னால் அணி திரள்கிறார்கள்.

11 அமைச்சர்கள்
ஏற்கனவே இருப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து மிகப்பெரிய தவறு. கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதனை செய்தார் அதன் காரணமாகவே 11 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியுற்றார்கள். ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏழைகளுக்கான கட்சி என்ற அடிப்படையில் தற்போது உண்மையான தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதவி வழங்கியிருக்கிறார்கள். ஓபிஎஸ் அணி உண்மையான தொண்டர்களின் இயக்கம் அணி என்பதை விட அதிமுகவை நாங்கள் என்பதுதான் சரியாக இருக்கும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications