சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 6 தொகுதிகள்.. மாவட்டங்களில் 32 தொகுதிகள்.. உத்தேச பட்டியலை தயார் செய்த பாஜக..!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 38 தொகுதிகள் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாக கூறி அந்த தொகுதிகளின் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறது தமிழக பாஜக தலைமை.

மேலும், 38 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர்கள் பட்டியலையும் உடன் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 38 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக தேசியத் தலைமை விரைவில் அதிமுக தலைமைக்கு கொடுக்கும் எனத் தெரிகிறது.

 பொங்கல் பண்டிகை நாளில் சென்னைக்கு வரும் அமித்ஷா: அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு முடிவாகுமா பொங்கல் பண்டிகை நாளில் சென்னைக்கு வரும் அமித்ஷா: அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு முடிவாகுமா

 பாஜகவுக்கு சாதகம்

பாஜகவுக்கு சாதகம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான, வாக்குவங்கி உள்ள தொகுதிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருப்பூர் வடக்கு, மேட்டுப்பாளையம், கோவை தெற்கு, மயிலாப்பூர், புவனகிரி, நாகர்கோவில் என அந்த பட்டியலில் 38 தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் சென்னையில் 6 தொகுதிகளும் பிற மாவட்டங்களில் 32 தொகுதிகளும் அடக்கம்.

 அதிமுக தலைமை

அதிமுக தலைமை

தமிழக பாஜக தரப்பில் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியல் அக்கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது விரைவில் பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி மூலம் அதிமுக தலைமைக்கு கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இந்த 38 தொகுதிகளில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும்.

வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பட்டியல்

தொகுதிகள் மட்டுமல்லாமல் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலையும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தயார் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே முழுமையாக உள்ளதால் இந்தப் பணிகளை இப்போதே முடித்துவிட்டது தமிழக பாஜக தலைமை.

15 முதல் 20 தொகுதிகள்

15 முதல் 20 தொகுதிகள்

தமிழக பாஜக தரப்பில் 38 தொகுதிகளை எதிர்பார்க்கும் நிலையில் அதிமுகவோ 15 சீட்களுக்கு மேல் கொடுக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பியூஷ் கோயலிடம் தமிழக பாஜகவின் வாக்குவங்கி மற்றும் செயல்பாடு குறித்து அதிமுக தரப்பில் புட்டு புட்டு வைக்கப்பட்டது. இதற்கு பிறகு தான் யதார்த்தத்தை உணர்ந்து 5 தொகுதிகளுக்கு ஒ.கே. சொன்னார் பியூஷ் கோயல்.

 தமிழக பாஜக

தமிழக பாஜக

இதேபோல் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதேபோன்ற ஒரு புள்ளி விவரங்களை பாஜக தேசியத் தலைமையிடம் விளக்கி கூறும் திட்டத்தில் இருக்கிறது அதிமுக தலைமை. ஆனால் எந்த புள்ளி விவரத்தை வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள், 25 தொகுதிகளுக்கு குறைந்து போட்டியிடுவதில்லை என்பதில் தீர்க்கமாக இருக்கிறது பாஜக தமிழக தலைமை.

English summary
The BJP expects 38 seats from the AIADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X