ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கும் 'ரத்தம்'.. தலைகீழா நின்னாலும் இங்கே கிடைக்காது - சுப.வீரபாண்டியன் பரபர!
சென்னை : ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கும் ரத்தம் மத்திய பிரதேசத்தில், உத்தர பிரதேசத்தில் கிடைக்கும். தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் கிடைக்காது என சுப.வீரபாண்டியன் பேசியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த மேடையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலுரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக - அதிமுக
திமுக சார்பில் நடைபெற்ற இந்த 'முப்பெரும் விழா' கூட்டத்தில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், "திமுக எப்போதும் சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும். தமிழில் எப்போதுமே ஒரு பொருளுக்கு முன் அ என்ற எழுத்தை சேர்த்தால் அது எதிர் பொருளைத்தான் தரும். அதுபோல திமுகவிற்கு எதிர்ப்பொருள் அதிமுக அவ்வளவுதான் என்று கருணாநிதி கூறுவார். திமுக ஆட்சி 5 அடி முன்னேற்றினால் அதிமுக 10 அடி பின்னோக்கி கொண்டு செல்லும்.

இனிமேல் திமுக தான்
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர் திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டது. இதுதான் திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம். தமிழகத்தை இனிமேல் திமுக தான் ஆட்சி செய்யும்." எனப் பேசினார்.

ஆர்.எஸ்.எஸ் நோக்கம்
அப்போது, தமிழகத்தில் தற்போது ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்று பொதுமக்களில் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்துப் பேசிய சுப.வீரபாண்டியன், "மதம் என்கிற பெயரால் மக்களை பிளவுபடுத்துகின்ற முயற்சியினை ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஏதேனும் நிகழ்வை நடத்தி கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்.

தமிழ்நாட்டில் கிடைக்காது
ஆனால் ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கும் ரத்தம் மத்திய பிரதேசத்தில், உத்தர பிரதேசத்தில் கிடைக்கும். தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் கிடைக்காது. அதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லை" என சுப.வீரபாண்டியன் பேசினார். மேலும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும், திமுக அரசு செய்த சாதனைகள் பற்றியும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு












Click it and Unblock the Notifications