சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்கள் கொடுத்திருக்கும் பிரட்,பால் ஒரு வேளைக்கு கூட பத்தாது... குஷ்புவிடம் பெண் கேட்ட கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: பட்டினம்பாக்கத்தில் பாஜக செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பொதுமக்களுக்கு பால் மற்றும் பிரட் அளித்தார். அப்போது உதவி பெற வந்த ஒரு பெண்மணி 5 கிலோ அரிசி கொடுத்திருந்தால் கூட பிரயோஜனமாக இருந்திருக்கும். தற்போது நீங்கள் கொடுத்திருக்கும் பிரட் மற்றும் பால் ஒரு வேளை கூட பத்தாது, நீங்கள் இன்னும் செய்ய வேண்டும், அதற்கு குஷ்பு நிச்சயம்உ தவுவோம் என்று உறுதி அளித்தார்.

Recommended Video

    Photoshoot-காக முதலமைச்சர் MK Stalin ஆய்வு செய்கிறார் | BJP Kushboo பேட்டி

    சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள டுமீல் குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி 500 பேருக்கு பிரெட் & 500 பால் பாக்கெட் ஆகியவற்றை நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் இதை வழங்கினார்.

    சூர்யாவிடம் 5 கோடி கேட்டது, நிஜ செங்கேனி பார்வதிக்கு கொடுக்கத்தான்..! அடடே பாமக..! சூர்யாவிடம் 5 கோடி கேட்டது, நிஜ செங்கேனி பார்வதிக்கு கொடுக்கத்தான்..! அடடே பாமக..!

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பு, 10 வருடமாக எம்எல்ஏவாக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்தார். 10வருடமாக இருந்தும் ஒரு தொகுதியை உங்களால் பார்க்க முடியவில்லை. எப்படி மொத்த மக்களையும் பார்த்து கொள்ள போகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எதிர்க்கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் தான் வேலை செய்கிறார்கள். திமுகவின் சார்பாக முதல்வர் ஸ்டாலினை தவிர யாரும் வேலை செய்யவில்லை என்றார்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    கனமழைக்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு அதிமுக ஆட்சியில் வடிகால்கள் சரியாக செய்யப்படாததும், அதில் நடத்திய ஊழல் தான் காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறாரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு குஷ்பு பதில் அளிக்கையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே தான் இருக்கும் .அதிமுக காலத்தில் வெள்ளம் ஏற்பட திமுக தான் காரணமா, திமுக தான் ஒரு காலத்தில் ஊழல் கட்சி என்று பேசப்பட்டது. கொளத்தூர் தொகுதியில் 10 வருடமாக ஸ்டாலின் எம்எல்ஏ, அங்கு மழையால் பாதிப்பு இல்லையா? வெள்ளம் தேங்கவில்லையா? 10 வருடமாக எம்எல்ஏவாக இருந்து சரி செய்ய முடியவில்லை என்றால், இதற்கு முன்பு இருந்த அதிமுகவை குற்றம்சாட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று குஷ்பு கூறினார்.

    பார்க்கவில்லை

    பார்க்கவில்லை

    ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு திரையுலகில் ஆதரவு தரவில்லை. நீங்கள் அவருக்கு ஆதரவு தருவீர்களா என்று கேட்டார். இந்த கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு, எனக்கு எதுவும் தெரியாது . ஜெய்பீம் படத்தை இன்னமும் பார்க்கவில்லை. படத்தை பார்த்துவிட்டு தெரிவிக்கிறேன். நேற்று பேப்பரில் பார்த்தேன். ஜெய்பீம் படம் யார் மீது உருவாக்கப்பட்டுள்ளதோ அவருக்கு உதவி செய்யவில்லை.. அவரிடம் படம் எடுக்க கேட்கவே இல்லை என்றார். அப்போதுகுறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், பார்வதி அம்மாவின் பெயரில் நடிகர் சூர்யா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார் என்றார்.

    அரசியல்

    அரசியல்

    அத்துடன் திரைத்துறையில் யாருமே சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு குஷ்பு அரசியலில் நிறைய இருக்கிறது. சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கவிட்டால் வேலை செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. ஆதரவு கொடுத்தால் தான் கூட நிற்கிறோம் என்று அர்த்தமில்லை. சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு நான் படம்பார்க்கவில்லை என்றார்.

    பால் போதாது

    பால் போதாது

    செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு உதவி பெற வந்த பெண்மணி 5 கிலோ அரிசி கொடுத்திருந்தால் கூட பிரயோஜனமாக இருந்திருக்கும். தற்போது நீங்கள் கொடுத்திருக்கும் பிரட் மற்றும் பால் ஒரு வேளை கூட பத்தாது என வேதனையாக இருக்கிறது என்றார் .

    குஷ்பு உறுதி

    குஷ்பு உறுதி


    இதற்கு பதில் அளித்த குஷ்பு உறுதியாக நாங்கள் உதவி செய்கிறோம் . எல்லா கட்சிகளும் செய்ய வேண்டும் என்றார். அதற்கு அந்த பெண்மணி, நீங்கள் முதல் அடி எடுத்து வைத்துள்ளீர்கள் என்றார். அப்போது குஷ்பு, நீங்கள் சொல்வது போல் முதல் அடி எடுத்து வைத்துள்ளோம். நிச்சயம் உ தவுவோம். இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ எங்கே? ஒரு பிரட் அல்லது பாலாவது கொடுத்தாரா என்று திமுகவை குஷ்பு விமர்சித்தார்.

    English summary
    chennai flood: A woman worry to Khushbu in pattinampakkam that The bread and milk you have given is not enough, please give 5kg rice to me.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X