இப்போ சந்தோஷமா? டிடிஎஃப் வாசனை போட்டுக் கொடுத்த பூவை! நோட் பண்ணிய சென்னை போலீஸ்! அடுத்து என்ன கைதா?
சென்னை : பிரபல யூடுயூபர் மற்றும் டிராவல் விலாக்கரான டிடிஎஃப் வாசன் 240+ கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் ஓட்டுவது மற்றவர்களை ஊக்கப்படுத்துவது போல் உள்ளது எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென என ட்விட்டரில் ஒருவர் புகார் அளித்த நிலையில், அந்த புகார் நோட் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை பதில் அளித்துள்ளது.
Recommended Video
எங்கெங்கு காணினும் வாசனடா என்பது போல கடந்த சில நாட்களாகவே டிடிஎஃப் வாசன் குறித்த பதிவுகள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. அவரது பிறந்தநாளுக்கு அவரைக் காண ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள் தான் தற்போது ஹாட் டாபிக்.
கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் தான் பயணம் செய்யும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றது எடுத்து அவருக்கு சுமார் 27 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

டிடிஎஃப் வாசன் சர்ச்சை
குறிப்பாக அவருக்கென்றே நடிகர்களுக்கு இணையாக ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக 2கே கிட்ஸ்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது பிறந்த நாளுக்கு வைத்த ரசிகர்கள் சந்திப்பில் கட்டுக்கடங்காமல் வந்த கூட்டம் தான் தற்போது இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு வைத்த ரசிகர்கள் சந்திப்பில் கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் அம்பத்தூரே திணறிப் போனது. இதையடுத்து போலீசார் இவரை கைது செய்ததாக தகவல் வெளியாகி அதன் பிறகு மேலும் புகழ்பெற்றார்.

240+ கிமீ வேகம்
லடாக் மற்றும் நேபால் பைக்டூர் மூலம் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தார். இந்நிலையில் கடந்த வாரம் பிறந்தநாளுக்கு கோவையில் வைத்த ரசிகர்கள் சந்திப்பில் மிகப்பெரிய கூட்டம் கூடியது. அங்கு ஒரு மிகப்பெரிய மைதானத்தில் பிறந்தநாள் கொண்டாடிய டிடிஎஃப் வாசனைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அந்த இடமே ஸ்தம்பித்து தான் போனது எப்படி இவருக்கு இவ்வளவு கூட்டம் என பலரும் ஆச்சரியப்பட்டு சமூக வலைதளங்களில் தேடி வந்த நிலையில் அவரது youtube பக்கத்தில் 243 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டிய வீடியோவை பகிர்ந்திருந்தார். இதையடுத்து பலரும் அவரை சூப்பர் மேன் என கொண்டாடி வந்தனர்.

அடுத்தடுத்து புகார்
2கே கிட்ஸ்களின் கமெண்டுகளால் கடுப்பான 90'ஸ் கிட்ஸ்கள் வாசனுக்கு எதிராக களமிறங்கினர். குறிப்பாக இவ்வளவு வேகத்தில் வாகனம் ஓட்டுவதா? எனவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார்கள் பதியப்பட்டது. இவ்வளவு வேகத்தில் அவர் எப்படி வாகனம் ஓட்டுகிறார்? இவரின் லைசென்ஸை கேன்சல் செய்து இவரை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களிலும் புகார்கள் பறந்தன. மேலும் இது போன்ற பைக் ரைடர்கள் இளம் சமுதாயத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும் பதிவிட்டனர்.

வழக்குப் பதிவு?
இந்நிலையில்தான் பூவை ஷகீர் கான் என்பவர் சென்னை காவல்துறைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டிடிஎஃப் வாசன் மிக வேகமாக வாகனம் ஓட்டிய புகைப்படத்தையும் அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பியுடன் இணைத்து "இருசக்கர வாகனத்தில் 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து அதை யூடியூபிலும் பதிவு செய்திருக்கிறார் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது போன்றவர்களை ஊக்கப்படுத்துவது போல இருக்கும்" என பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள சென்னை காவல்துறை இது நோட் செய்யப்பட்டுள்ளது என ரீட்விட் செய்துள்ளனர். இதன் காரணமாக டிடிஎஃப் வாசல் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா அவரது லைசென்ஸ் கேன்சல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications