நள்ளிரவு நேரம்... சைக்கிளில் இணை ஆணையர் திடீர் விசிட்...அதிர்ந்த இரவு காவலர்கள்
சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று காவலர்களை கண்காணித்துள்ளார். இவரது இந்த திடீர் ஆய்வு காவலர்களை பதறவைத்துள்ளது.
சென்னை: சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று இரவு ரோந்து காவலர்களை கண்காணித்ததோடு, காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Recommended Video
சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக ரம்யா பாரதி ஐபிஎஸ் இருந்து வருகிறார். இவர் 2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார்.
இவரை கடந்த ஜனவரி மாதம் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. அப்போது முதல் தன்னுடைய பணிகளை இவர் சிறப்பாக செய்து வருவதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

காவல்துறையினர் அலர்ட்
அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். "தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து நான் சமரசம் செய்து கொள்ளமாட்டேன் என்று கறாராக பேசினார். முதல்வரின் இந்த பேச்சு காவல்துறையினர் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பணி நேரத்தில் செல்போன் பேச தடை
பணிக்கு வந்தவுடன் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல் பணி முடிந்து போகும்போது இன்று என்னென்ன வேலைகளை பார்த்தேன் என்ற விவரங்கள் அனுப்ப வேண்டும். மேலும், பணி முடிந்துப்போகும் போதும் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்யாபாரதி ஐபிஎஸ்
இந்நிலையில், சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று காவலர்களை கண்காணித்துள்ளார். அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை சைக்கிளில் பயணம் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் அப்போது இரவு பணியில் இருந்த காவலர்களிடம் அங்கு இருக்கும் நிலை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

இரவு ரோந்து பணி
சென்னை பாரிமுனை பூக்கடையில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை 8 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட சரகங்களில் சைக்கிளில் சென்று இணை ஆணையர் ரம்யா பாரதி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக இரவில் ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தார். அப்போது, இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இணை ஆணையரின் இந்த திடீர் விசிட்டால் காவலர்கள் அதிர்ந்து போனார்கள் என்றே சொல்லலாம்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications