தவெகவில் யாருக்கு அதிர்ஷ்டம்.. விஜய் தரப்போகும் சர்ப்ரைஸ்.. மாமல்லபுரம் விடுதியை புக்கிங் செய்த தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வாரிக் குவித்து, அசுர பலத்துடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தனது அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்க இருக்கிறது. வெற்றி பெற்ற தனது கட்சி எம்எல்ஏக்களை சந்திப்பதற்காக பூஞ்சேரி தனியார் விடுதியை தவெக புக்கிங் செய்திருக்கிறது. முன்னதாக வெற்றி பெற்ற உடனேயே அனைவரும் பனையூர் வர வேண்டும் என்று ஏற்கனவே விஜய் கூறியிருந்தார். அதன்படி அனைத்து தவெக வேட்பாளர்களும் சென்னை விரைந்து வருகிறார்கள்.

2026 சட்டசபை தேர்தலில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விஜய்யின் தவெக முன்னிலை வகிக்கிறது. எப்படியும் மெஜாரிட்டி கிடைக்கும் என்று தவெக உறுதியாக நம்புகிறது. ஏனெனில் பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாகவே இருக்கிறது. கடுமையான போட்டியை திமுகவினர் சந்தித்துள்ளார்கள்.

The Surprise Vijay Has in Store for TVK TVK Books the Poonjeri Resort in Mamallapuram

எனவே தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் முன்னிலையில் உள்ள வேட்பாளர்களைச் சந்தித்து அடுத்தகட்ட ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை விஜய் மேற்கொள்ள உள்ளார். இதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் ஒரு தனியார் விடுதியை தவெக தலைமை முழுமையாக முன்பதிவு செய்துள்ளது. அந்த விடுதியில் தான் விஜய் பல்வேறு அரசியல் சந்திப்புகளை நடத்தி உள்ளார். அந்த வகையில் இந்த சந்திப்பும் அந்த குறிப்பிட்ட தனியார் விடுதியில் தான் நடக்க போகிறது.'

தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகால திராவிட ஆதிக்கத்தை உடைத்துள் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், முதல் முறையாக ஆட்சிக்கு வரப்போவது உறுதியாகி வருகிறது. எனினும் கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது தனித்து ஆட்சி அமையுமா என்பது மெஜாரிட்டியை பொறுத்தே தெரியவரும். இந்த சூழலில் மகாபலிபுரம் விடுதியில் தனது எம்.எல்.ஏ-க்களுடன் விஜய் ஆலோசனை நடத்துவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மகாபலிபுரம் பூஞ்சேரி விடுதியில் கூட்டணி குறித்தும் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருவது குறித்த சட்ட ஆலோசனைகள் நடக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் அமைச்சர்கள் யார் யார், சபாநாயகர் யார் , மற்றும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த பூஞ்சேரி சந்திப்புக்கு பின்னர் அடுத்தடுத்து பல்வேறு விஷயங்கள் குறித்து மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+