1+1.. அரபிக்கடல் ஒன்னு.. வங்காள விரிகுடா இன்னொன்னு! தமிழகத்திற்கு ஹாப்பி நியூஸ் சொன்ன வெதர்மேன்
சென்னை: தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்கினாலும் ஒன்னுதான் தொடங்காவிட்டாலும் ஒன்னுதான் என்கிற அளவுக்கு வெயில் பொளந்து கட்டி வருகிறது. இந்நிலையில், விரைவில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் புயல் உருவாகலாம் என வெதர்மேன் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் தொடங்கி, ஐடி நிறுவனங்களுக்கு ஷிப்ட் டைமில் செல்லும் ஊழியர்கள் வரை பலதரப்பட்ட மக்களும் இந்த வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போதாத குறைக்கு இன்று வழக்கத்தை விட வெயில் மேலும் உக்கிரமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில், தமிழக மக்களுக்கு வெதர்மேன் பிரதீப் ஜான் குட் நியூஸை கூறியிருக்கிறார். அதாவது, அரபிக்கடலில் தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் இதன் மூலம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் பரவலாக மழையை பெறும் என்றும் கூறியுள்ளார். இந்த புயல் வரும் 5ம் தேதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல வங்கக்கடலில் நிலவி வரும் காலநிலை காரணமாக புயல் உருவாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது 9ம் தேதி வாக்கில் உருவாகலாம் என்றும், ஆனால் இதன் போக்கினை இப்போதே கணிக்க முடியாது எனவும் வெதர்மேன் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டின் எந்த பகுதிக்கு வந்தாலும், மாநிலம் முழுவதுமாக பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே, வெப்பநிலையில் இப்போத இருப்பதை விட அப்போது வெகுவாக குறைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, "ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழகத்தை தாக்காமல் ஒடிசா, மேற்கு வங்கம் என நகர்ந்துவிட்டால் இங்கிருக்கும் ஈரப்பதத்தை முற்றிலுமாக உறிஞ்சி எடுத்துச் சென்றுவிடும். எனவே வெப்பநிலை தற்போது இருப்பதைவிட அதிகமாகத்தான் பதிவாகுமே தவிர குறையாது.
வழக்கமாக மார்ச் தொடங்கி ஏப்ரல், மே மாதம் வரை வெயில் கொளுத்தினாலும், ஜூன் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். கடந்த ஆண்டும் இப்படிதான் தொடங்கியது. இந்நிலையில், இந்த ஆண்டு மழை சற்று தள்ளி போகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 4ம் தேதியன்று மழை தொடங்கிவிடும். கேரள மாநிலம் இந்த மழையால் செழிப்படையும், இருப்பினும் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் மழை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனி வரும் நாட்களில் வெப்பநிலை கணிசமாக குறையும்.
-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி!












Click it and Unblock the Notifications