தேனிசை தென்றல் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இசை உலகிற்கு ஆற்றிய பணிகளை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேவா உடல் நாளை தகனம் செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு என்ற அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தேவா வென்றுள்ளார்.

இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த தேவாவின் இசை பணியை பங்களிக்கும் விதமாக அரசு மரியதையுடன் இறுதிச்சடங்கு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த இயக்குநர் இமயம் பாரதி ராஜா மற்றும், இயக்குநர் பாக்யராஜ், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கும் அரசு மரியாதையை தமிழக அரசு வழங்கியிருந்தது. இந்த நிலையில், தேவாவின் உடலுக்கும் அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
