சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Tamilnadu lockdown: இன்று பொது போக்குவரத்து இயங்காது.. வேறென்னவெல்லாம் இயங்காது லிஸ்ட் இதோ!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று பொது போக்குவரத்தும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதங்களில் வெறும் 3 இலக்கத்தில் இருந்த தினசரி தொற்று இன்று 5 இலக்கமாக உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டன. இதை சிறப்பாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் பணியாற்றி வருகின்றன.

வீட்டிலேயே கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டாம்.. அமைச்சர் மா.சு முக்கிய அட்வைஸ்.. ஏன் தெரியுமா? வீட்டிலேயே கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டாம்.. அமைச்சர் மா.சு முக்கிய அட்வைஸ்.. ஏன் தெரியுமா?

முழு லாக்டவுன்

முழு லாக்டவுன்

இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் பண்டிகை என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக பொழுதை கழிக்க குவிவார்கள் என்பதால் அன்றைய தினம் முழு லாக்டவுன் போடப்பட்டது. ஆனால் இநத வாரம் 23 ஆம் தேதி முழு லாக்டவுன் இருக்காது என சொல்லப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன்

ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன்

ஆனால் கேஸ்களின் எண்ணிக்கை கருத்தில் கொண்டும் கொரோனா பரவலை தடுக்கவும் இன்றைய தினம் முழு லாக்டவுன் பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் ஊரடங்கின் போது என்ன மாதிரியான தடைகள், அனுமதிகள் இருந்ததோ அதே இந்த வாரமும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் இல்லை

பஸ்கள் இல்லை

வழக்கமாக முழு லாக்டவுனின் போது பேருந்துகள் இயக்கப்படாது. அதே போல் இந்த முறை பேருந்துகள இயக்கப்படாது. ஆனால் எழும்பூர், கோயம்பேடு, சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களிலிருந்து ஆட்டோக்கள் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இது மாவட்ட பேருந்து நிலையம், ரயில்நிலையங்களுக்கும் பொருந்தும். அது போல் செயலி மூலம் முன் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள், கால்டாக்சியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளும் இல்லை

டாஸ்மாக் கடைகளும் இல்லை

அது போல் இன்றைய தினம் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாது. எனவே அத்தியாவசியத் தேவைகளை தவிர அதுவும் அரசு அனுமதித்த சேவைகளை தவிர மற்றவர்கள் யாரும் இன்று வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. அது போல் பால், மருந்து கடைகளை தவிர வேறு எந்த கடைகளும் திறந்திருக்காது.

English summary
Tamilnadu Lockdown: Today No private and government buses plying in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X