இந்து மதத்தில் ஜாதி கிடையவே கிடையாது! பாகுபாடு உருவாக்கியது கிறிஸ்தவ மிஷனரிகள் தான்! அண்ணாமலை சாடல்
சென்னை: ‛‛இந்து மதத்தில் ஜாதி என்பது கிடையாது. இந்து மதத்தில் ஜாதி என்பது கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கிய கட்டமைப்பு தான். குறிப்பிட்ட பணி செய்வதன் மூலம் உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனும் பொய் கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளனர்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்நிலையில் 4 நாள் சுற்றுப்பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றார்.
அங்குள்ள தமிழர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களிடம் வாழ்வாதாரம் குறித்து கேட்டார். மேலும், மத்திய அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும் என நம்பிக்கை அளித்தார்.

அண்ணாமலை பேட்டி
மேலும் அங்குள்ள தமிழ் கட்சி தலைவர்களுடன் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் அண்ணாமலை சென்னையில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தில் ஜாதி உள்ளதா, இல்லையா என்பது குறித்து விளக்கம் அளித்தார். இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது:

ஜாதி என்பது கிடையாது
இந்து மதத்தில் ஜாதி என்பது கிடையாது. இந்து மதத்தில் ஜாதி என்பது கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கிய கட்டமைப்பு தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை என்பது தான் பணியாக உள்ளது. ஆனால் பணியின் அடிப்படையில் நீ உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்பது இந்து மதத்தில் ஒருபோதும் கிடையாது. ஒவ்வொருவரும் தங்களின் பணியை செய்கின்றனர்.

பொய் கட்டமைப்புகள்
ஆனால் கிறிஸ்தவ மிஷனரிகள் வந்த பிறகு குறிப்பிட்ட பணி செய்வதன் மூலம் நீ உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என பொய் கட்டமைப்புகளை உருவாக்கப்பட்டது. இதுதான் தற்போது நடந்து வருகிறது. கோவிலில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமித்தபோது முதல் கட்சியாக பாஜக அதனை வரவேற்றது. அதேநேரத்தில் ஒவ்வொரு கோவிலின் தன்மையை அரசு உணர்ந்து செயல்படவேண்டும் என கூறினோம்.

ஜாதியில்லா சமுதாயம்
எனது தனிப்பட்ட மற்றும் பாஜகவின் கருத்து என்பது இந்து சமுதாயத்தில் ஜாதி என்று ஒன்று இல்லை. அதிலும் குறிப்பாக மேல்ஜாதி, கீழ்ஜாதி எனும் பாகுபாடு கிடையாது. இந்த விஷயத்தில் கடைசி 200 ஆண்டில் உள்ளே வந்து குழப்பி விட்டனர். இதை மீட்டெடுக்கும் கட்டாயம் நமக்கு உள்ளது. பேச்சில் மட்டுமின்றி செயலினாலும் ஜாதி இல்லா சமுதாயம் உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது'' என்றார்.
Recommended Video

வாழ்த்து தெரிவிப்பீங்களா?
இந்த வேளையில், திமுக பதவியேற்று ஓராண்டு முடியும் தருவாயில் அதன் சாதனைக்கு வாழ்த்து தெரிவிப்பீர்களா என அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛எந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிக்கிறது?. தினமும் வாழ்த்து தெரிவிக்க நான் என்ன உதயநிதி ஸ்டாலின் உடன் இருக்கும் எம்எல்ஏக்களா?. வாழ்த்து தெரிவிப்பது எங்கள் வேலை கிடையாது. அவர்கள் தங்களுக்கான வேலையில் தவறு செய்தால் எதிர்க்கட்சியாக தட்டிக் கேட்போம். புகழ் பாடமாட்டோம்'' என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications