Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில் துவரம் பருப்பு இனி கிடைக்குமா? தட்டுப்பாடு தகவலுக்கு நடுவே அமைச்சர் சக்கரபாணி குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் நடப்பு மாதமான அக்டோபரில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய துவரம் பருப்பு போதிய அளவு கையிருப்பு இல்லை. இதனால் பொதுமக்களுக்கு துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில் அதனை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முற்றிலுமாக மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி கையிருப்பு உள்ள துவரம் பருப்பு பற்றிய விவரங்களை புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டு மக்களுக்கு குட்நியூஸ் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாம் கடைகளில் வாங்குவதை விட குறைந்த விலையில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ration shop palm oil

நம் மாநிலத்தில் மொத்தம் 34,793 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் இரண்டை கால் லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டவற்றை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் நகர்வு செய்து வழங்கும். ஆனால் இந்த மாதம் பல ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ரேஷனில் பொதுமக்களுக்கு துவரம் பருப்பு வழங்கப்படவில்லை. இதற்கு துவரம் பருப்பு கையிருப்பு அளவு குறைந்து இருப்பது தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டை தான் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள், குடும்ப அட்டைத்தாரர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கடுமையான நிதி நெருக்கடியிலும் விலை மாற்றம்ஏதுமின்றி வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு கிலோ ரூ.30 மற்றும் பாமாயில் பாக்கெட் ஒன்றிற்கு ரூ.25 என்ற விலையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கிய இத்திட்டத்தினை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜூலை 2024ல் ஆணையிட்டார்.

அதன்படி, அக்டோபர் 2024, நவம்பர் 2024 மற்றும் டிசம்பர் 2024 ஆகிய மூன்று மாதங்களுக்கு தேவையான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள் ஆகியவற்றை திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்வதற்காக 10.09.2024 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு தேவையான 51,00 மெ.டன் கனடா மஞ்சள் துவரம் பருப்பு குறைந்த விலைப்புள்ளி அளித்த 5 ஒப்பந்தார்களுக்கும், 6 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்கு குறைந்த விலைப்புள்ளி அளித்த 4 ஒப்பந்தாரர்களுக்கும் 16.09.2024 அன்று கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன. அவர்களிடமிருந்து பருப்பும், பாமாயில் பெறப்பட்டு கிடங்குகளுக்கு தொடர்ந்து நகர்வு செய்யப்பட்டு வருகிறது.

கனடா மஞ்சள் பருப்பானது 2012 ம் ஆண்டு முதல் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பருப்பில் புரதச்சத்து மற்றும் ஊட்டசத்து மற்றும் இதர பருப்புகளை விட கூடுதலாகத்தான் உள்ளது என ஆய்வில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தனியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற ஆணை எண் 2377/2023 நாள்.03.03.2023ன் படி ‛‛Saving that money was the vision of the cabinet when they had stated that either Canadian Yellow Lentill or Tur Dal counld be purchased and has given the choice to the committee which invited the tender'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மூன்று மாதங்களுக்கு தேவையான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில் 01.10.2024 அன்றைய தேதியில் கிடங்கில் 9,324 மெ.டன் துவரம் பருப்பும், நியாயவிலைக்கடைகளில் இருப்பு 6,044 மெ.டன் துவரம் பருப்பும் இருப்பு இருந்தன. அக்டோபர் மாத ஆரம்பத்தில் இருந்த மொத்த கையிருப்பு பருப்பு 15,368 மெ.டன் ஆகும். அக்டோபர் 2024 மாதத்திற்கு மொத்த ஒதுக்கீடு 20,750 மெ.டன் ஆகும். மொத்த ஒதுக்கீட்டில் 7,679 மெ.டன் குடும்ப அட்டைத்தார்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிட்டது.

14.10.2024 தேதியில் நியாய விலைக்கடைகளில் இருப்புள்ள 8,065 மெ.டன் துவரம் பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கிடங்குகளில் இருப்பு உள்ள 5,115 மெ.டன் துவரம் பருப்பு கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகிறது.
எனவே அக்டோபர் 2024ம் மாதத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் விநியோகம் செய்யப்பட்ட 8,065 மெ.டன் போக கிடங்கு மற்றும் நியாய விலைக்கடைகளில் உள்ள 13,180 மெ.டன் இருப்பானது மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப் போதுமானதாக உள்ளது.

மேலும் நவம்பர் 2024 மாதத்திற்கான துவரம் பருப்பு விநியோகத்தினை துரிதப்படுத்த தினமும் துவரம் பருப்பு ஒப்பந்ததார்களிடம் ஆய்வு கூட்டமும் கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட ஒப்பந்தரர்களின் ஆலைகள் மற்றும் கிடங்குகளிலும் ஆய்வுகள் உயர் அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஆதலால், நாளேடு ஒன்றில்குறிப்பிட்டிருப்பது போன்று துவரம் பருப்பு விநியோகத்தில் எவ்விததட்டுப்பாடும் இல்லை. அரசியலில் முகவரியில்லாமல் இருக்கும் சிலர் தங்கள் இருப்பை காண்பிக்க கூறும் தேவையில்லாத கருத்துகளில் உண்மை ஏதும் இல்லை என்பது துவரம் பருப்பினை பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நன்றாக தெரியும். தீபாவளிக்கு மட்டுமல்ல வருகின்றன மாதங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை பெற்று கொள்ளலாம்'' என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+