ஓஎம்ஆர் சாலையில் 5 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணங்கள் இல்லை.. மகிழும் வாகன ஓட்டிகள்
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலை சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண வசூல் இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் 1999ஆம் ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள் நிறைய உருவாகின. இந்த சாலை கிட்டதட்ட ஐடி தொழிலின் ஹாட்ஸ்பாட்டாக மாறியது. 2008ஆம் ஆண்டு ஐடி எக்ஸ்பிரஸ் வே வாக மாறியது.
மத்திய கைலாஷில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுச்சேரி வரை 20 .1 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப்பாதை அமைக்கப்பட்டது.

சாலையில் விளக்குகள்
மேடு, பள்ளங்கள் ஏதுமின்றி காணப்படும் சாலை, அழகிய மின் விளக்குகள், போக்குவரத்து சிக்னல்களுடன் அமைக்கப்படட ஓ எம் ஆர் சாலையில் பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை ஆகிய பகுதிகளில் 5 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

13 ஆண்டுகள் கட்டணம்
நாள்தோறும் இந்த வழியாக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில் 13 ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து சுங்கச்சாவடிகளை மூடக் கோரி போராட்டமும் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கின் போது இந்த சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாமல் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது.

மெட்ரோ பணிகள்
தற்போது ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெறவுள்ளதால் பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எந்தவித அறிவிப்பு
ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடி குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறாதது வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துறை ரீதியான அறிவிப்புகள் வரவில்லை என தெரிவித்தனர். நாவலூர் சுங்கச்சாவடி சென்னை மாநகராட்சி எல்லைக்கு அருகில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதால் அங்கு சுங்கக் கட்டணம் வசூல் குறித்து தெளிவான விளக்கத்தை எதிர்பார்த்துள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications