“என் பள்ளிக்கே லஞ்சம் வாங்கினார்கள்.. நானே சாட்சி”.. அன்பில் மகேஷ் மீது மரியவில்சன் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக பணம் வசூலிக்கப்பட்டது. என்னுடைய பள்ளிக்கே கட்டாயப்படுத்தி பணம் வாங்கினார்கள் என்று நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தானே நேரடி சாட்சி என்றும், பணம் கொடுத்த இடம் மற்றும் தொகை உள்ளிட்ட விவரங்களைத் தெளிவாக தெரிவிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப் பேரைவயில் பேசியதாவது: உயர்கல்வியில் எண்ணிக்கையா, தரமா என்கிற கேள்வி எழுகிறது. எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரிகள் கொண்டு வந்தோம் என்பது முக்கியமில்லை. தரம் தான் ரொம்ப முக்கியம். முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விஸ்வநாத் பங்கேற்றிருந்தார்.

they-took-a-bribe-from-my-school-maria-wilson-s-explosive-charge-against-anbil-mahesh

அப்போது, எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரிகள் இருக்கிறது என்பது குறித்து விவாதித்தோம். நாமும் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறோம். முன்னாள் அமைச்சர்களும் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். தரத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

அதில் பார்த்தீர்கள் என்றால் சர்ட்டிபிகேஷ என்று சொல்வார்கள். அரசு கலைக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் எத்தனை சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள் என்று பட்டியல் எடுத்தோம். ஆனால், கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளாக ஒன்றுமே இல்லை.

ஒரு ஐஓஎஸ் சான்றிதழ்கூட வாங்கவில்லை. எந்த சான்றிதழும் வாங்காமல் நாம் இத்தனை ஆண்டுகள் கல்லூரிகளை நடத்தி வந்திருக்கிறோம் என்றால் எப்படி தரம் வரும். எண்ணிக்கை மட்டுமே வரும். அதனடிப்படையில்,எந்த முயற்சியும் எடுத்ததுபோலத் தெரியவில்லை. தனியார் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான், வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது.

லஞ்சம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையில் எனக்கும் ஓரளவுக்கு அனுபவம் இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் நிறைய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. நிறைய முறைகேடுகள் குறித்து அதில் சொல்லப்பட்டன. நிறைய பேர் மீது வழக்குகளும் போட்டிருந்தார்கள். கடந்த ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி வழங்குவதற்காக கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். கட்டாயப்படுத்தி பணத்தை வாங்கினார்கள்.

இந்த விஷயத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். பேரவையில் சாட்சி சாட்சி என்று கேட்கிறார்கள். ஆவண சாட்சி வந்துவிட்டுப் போகட்டும். பள்ளிகளில் பணம் வசூலிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் நானே ஒரு சாட்சி தான். முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சபையில் தற்போது இல்லை. அவர் இருந்தால் சொல்லியிருப்பேன். இதைக் குறித்து பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால், வேறு வழியில்லை.

இந்த விவகாரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும். நாளைக்கு வேண்டுமானால் அவர்கள் அவதூறு வழக்கு தொடுக்கட்டும். அல்லது விசாரணைக்கு அழைக்கட்டும். நானே வருகிறேன். அவரை நேரில் சந்திக்கிறேன். எந்த இடத்தில், எவ்வளவு பணம் கொடுத்தோம் என்பதை என்னாலேயே தெளிவாக சொல்ல முடியும். இதுதான் சாட்சி. நான் சொல்லக் கூடாது தான் என்று நினைத்தேன். சிறுபான்மை பள்ளியிடம் எவ்வளவு வாங்கினீர்கள் என்று என்னால் சொல்ல முடியும் என்று கூறினார். இதனால், சட்டப் பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+