சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3வது அணி உருவாகிறதா? திமுக அதிமுகவே காரணமாகிறதா? செம்ம ட்விஸ்ட் இருக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வி எழுகிறது . இதற்கு திமுகவும் அதிமுகவும் காரணமாக இருக்குமா என்பது குறித்தும் சில கேள்விகள் எழுகின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு சில வாரங்களில் எப்போது என்பது குறித்து அறிவிக்கப்பட உள்ளது தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை இல்லாத ஒரு புதிய களத்தை சந்திக்கப் போகிறது எப்படி என்கிறீர்களா? ஜெயலலிதா இல்லாத,, கருணாநிதி இல்லாத முதல் தேர்தலை தமிழகம் சந்திக்கப் போகிறது.

திமுகவில் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் இடத்தில் ஸ்டாலினும் அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இடத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் இப்போது உள்ளார்கள். இருவரும் முதல்வர் வேட்பாளராக முதல்முறையாக தேர்தல் களத்தை சந்திப்பது இருவருக்குமே அக்னி பரிட்சை போன்றதாக கருதப்படுகிறது.

அதிமுக-திமுக

அதிமுக-திமுக

10 வருடம் ஆட்சியில் உள்ளதால் ஆளும் அதிமுக அரசு மீது பொதுவாக உள்ள எதிர்ப்பலைகள் மற்றும் அதிரடியான பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் ஐபேக் வியூகங்கள் மற்றும் வலுவான கூட்டணி ஆகியவற்றை கொண்டு திமுக சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. அதிமுகவும் திமுகவுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பாமக பாஜக திமுக ஆகியவற்றுடன் வலுவான கூட்டணி அமைத்து இந்த முறை சட்டசபை தேர்தலை சந்திக்க போகிறது‌.

விட்டுக்கொடுக்காது

விட்டுக்கொடுக்காது

திமுக மற்றும் அதிமுக இந்த இரண்டு கட்சிகளுமே கூட்டணி கட்சிகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது கூட்டணியில் பங்கேற்கலாம் ஆட்சியில் பங்கு என்பது இதுவரை இவர்கள் இருவருமே விட்டுக் கொடுத்தது இல்லை. இது ஒருபுறம் எனில், இரு கட்சிகளுமே ஒரு முறை கூட அதிக தொகுதிகளை விட்டுக் கொடுத்ததில்லை. அதே பாணியை தான் இப்போதும் திமுக, அதிமுக கட்சிகள் கையில் எடுக்கின்றன.

சந்தேகத்தில் கட்சிகள்

சந்தேகத்தில் கட்சிகள்

திமுக இந்த முறை நாம்தான் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று வலுவான நம்பிக்கையில் இருக்கிறது .இதே போன்ற மனநிலையில் தான் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளும் உள்ளன. இதன் காரணமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மதிமுக இடதுசாரிகள் போன்றவை தங்களுக்கு உரிய இடம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறைவான தொகுதிகளே கிடைக்குமோ என்ற அச்சத்திலும் உள்ளன.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவிடம் அதிக தொகுதியை கேட்டு பெற வேண்டும் என பாஜக பாமக தேமுதிக ஆகியவை விரும்புகின்றன. ஆனால் அதிமுக மேலிடம் கொடுக்க தயாராக இல்லை என்றே சொல்லப்படுகிறது. எனினும் ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் தேர்தல் என்பதால், குறிப்பிட்ட அளவு தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயாராக உள்ளதாகவும் சொல்கிறார்கள். பாமக, பாஜக ஆகியவற்றுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

3வது அணி

3வது அணி

இப்போது உள்ள சூழ்நிலையில் தங்களுக்கு உரிய தொகுதி கிடைக்கும் என்று தேமுதிக பாமக ஆகியவற்றுக்கு இன்னும் உறுதியாக நம்பிக்கை இல்லை. திமுக கூட்டணியில் தொகுதி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கியதாக தெரியவில்லை. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட வைக்க திட்டம் உள்ளதாகவும் ஒருவகையான செய்திகள் உலா வருகின்றன. ஒருவேளை அப்படியான நெருக்கடிகளுக்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சந்தித்தால் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மதிமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெளியேறவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

தொகுதி பங்கீடு

தொகுதி பங்கீடு

அதிமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய இடம் கிடைக்காத பட்சத்தில் பாமக தேமுதிக ஆகியவையும் வெளியேறக் கூடும். அப்படி இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறினால் கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி உடன் பாமக , காங்கிரஸ் , தேமுதிக போன்றவை இணைந்து தேர்தலை சந்தித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லையாம். ஆனால் அப்படியான ஒரு சூழ்நிலை அதிமுகவும் திமுகவும் கொண்டு செல்லாது என்ற இந்த முறை நம்பப்படுகிறது. சென்றமுறை மக்கள் நல கூட்டணி போல் இந்த முறை மூன்றாவது அணி உருவாகுமா என்பதை திமுக அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்த பின்பே தெரிய வரும்.

English summary
The question arises as to whether a third team will be formed in the Tamil Nadu Assembly elections. Some questions arise as to whether DMK and AIADMK are responsible for this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X